காட்டுக்குள் மலர்ந்த காதல் கதை... தலக்கோணம்
நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு, ரிலீஸ்க்கு தயாராகி உள்ள படம் தலக்கோணம். எஸ்.ஜே.எஸ். இண்டர் நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரிக்கும் படம் தலக்கோணம். இதில் நாயகனாக ஜிதேஷ், நாயகியாக ரியா நடிக்கின்றனர். கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, பெரோஸ்கான், நம்பிராஜ், சண்முகசுந்தரம், பாண்டு, காதல் அருண்குமார், நாராயணமூர்த்தி, டெலிபோன் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பத்மராஜ் இயக்கியுள்ளார்.
தலக்கோணம், சாலக்குடி காட்டுப்பகுதியில் படமாகியுள்ளது. காட்டுக்குள் ஜிப், ஸ்டெடிகாமுடன் நான்கு கேமரா செட் வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது.
தலக்கோணம் படம் சஸ்பென்ஸ், திகில், காட்சிகளுடன் அழுத்தமான காதலும் இருக்கும் என்கிறார் இயக்குநர் பத்மராஜா.

ஜித்தேஷ் - ரியா
ஜித்தேசும், ரியாவும் வெவ்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள். இவர்கள் ஒன்றாக சேர்ந்து அடர்ந்த காட்டுக்குள் என்.எஸ்.எஸ். கேம்ப் செல்கிறார்கள். அங்கு இருவருக்கும் காதல் மலர்கிறது என்று தலக்கோணம் குறித்து டைரக்டர் பத்மராஜ் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் கடத்தல்
கதாநாயகி ரியா, தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். அவர் கடத்தப்படுவது ஏன்? அவரை ஜித்தேஷ் மற்ற மாணவர்களுடன் இணைந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையாம்.

மாணவர்களின் வீரம்
இந்தப்படம் என்.எஸ்.எஸ். மாணவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் சொல்லும் படமாக உருவாகி உள்ளது என்கிறார் பத்மராஜ்.

யு/ஏ சான்றிதழ்
தணிக்கை குழுவினர் படத்தை பாராட்டி யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். விரைவில் வெளிவருகிறது, என்றார்.

கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு
தலக்கோணம். ஜித்தேஷ், ரியா ஜோடி தவிர தவிர கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, பெரோஸ் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

சமுத்திரகனியின் உதவியாளர்
ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, சுபாஷ், ஜவஹர் இசை அமைக்கிறார்கள். சமுத்திரக்கனி உதவியாளர் கே.பத்மராஜ் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











