புட்ட பொம்மா செல்லம் மட்டுமில்ல..இந்த டாப் ஹீரோயினும் தளபதி 65ல இருக்காங்களாம்.தீயாய் பரவும் தகவல்!
சென்னை: விஜய்யின் தளபதி 65ல் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

தளபதி 65ல் பூஜா ஹெக்டே
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பூஜா ஹெக்டே, முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஆல வைகுந்தபுரமுலு
ஆனால் அதன்பிறகு தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியாக உள்ள பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜூனுடன் நடித்த ஆல வைகுந்தபுரமுலு படம் கடந்த ஆண்டு வெளியானது.

ஹிட் பாடல்
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது. இந்நிலையில் விஜய்யின் தளபதி 65 படத்தில் கமிட்டாகியுள்ளார் பூஜா ஹெக்டே.

ராஷ்மிகா மந்தனா
இதனிடையே தளபதி 65 படத்தில் மற்றொரு ஹீரோயின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யின் தளபதி 65ல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 65 படம்
ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தளபதி 65 படத்தில் ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்ட பணிகள்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 65 படத்திற்கான ஸ்க்ரிப்ட்டின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளார் நெல்சன் திலீப்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











