அடி தூள்.. வாத்தி எப்போ வந்தாலும் சரவெடி தான்.. ஒரு மில்லியன் லைக்ஸ் அள்ளிய வாத்தி கம்மிங் பாடல்!

சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

Recommended Video

Master மோதல் | Thalapapthy Vijay | Lokesh Kanagaraj | Lock Down

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் மாஸ்டர்.

கொரோனா பாதிப்பு காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் திட்டமிட்டபடி வெளியாகாமல் தள்ளிப் போயுள்ளது.

அனிருத் இசை

அனிருத் இசை

கத்தி படத்திற்கு பிறகு மாஸ்டர் படத்தில் மீண்டும் விஜய்க்காக இசையமைத்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத். கத்தி படத்தை போலவே மாஸ்டர் படத்தின் மொத்த ஆல்பமும் ரசிகர்கள் மத்தியிலும் யூடியூபிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரைட்.

ஒரு மில்லியன் லைக்ஸ்

அனிருத் இசையில் கானா பால சந்தர் வரிகளில் அனிருத் மற்றும் கானா பாலாசந்தர் பாடிய வாத்தி கம்மிங் பாடலின் லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியானது. இதுவரை 31 மில்லியன் வியூஸ்களும், 1 மில்லியன் லைக்குகளையும் அள்ளி மெர்சல் காட்டி வருகிறது வாத்தி கம்மிங் பாடல்.

விமர்சனம்

குட்டி ஸ்டோரி பாடலை தொடர்ந்து செகண்ட் சிங்கிளாக வெளியான மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலில், பாடல் வரிகளே இல்லாமல், வெறும் இசையே நிரம்பி வழிந்ததாக அந்த பாடல் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதையும் தாண்டி அனிருத்தின் துள்ளலான இசை மற்றும் விஜய்யின் நடன ஸ்டெப்புகள் வாத்தி கம்மிங் பாடலை வேற லெவலில் ஹிட் அடிக்க வைத்துள்ளது.

7வது முறை

மெர்சல் படத்தின் டீசர் 1.1 மில்லியன் லைக்குகள், சர்கார் டீசர் 1.4 மில்லியன் லைக்குகள், சிங்கப்பெண்ணே 1.1 மில்லியன் லைக்குகள், பிகில் டிரைலர் 2.3 மில்லியன் லைக்குகள், வெறித்தனம் 1.3 மில்லியன் லைக்குகள், குட்டி ஸ்டோரி 1.6 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ள நிலையில் 7வது முறையாக தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் லிரிக் வீடியோவும் 1 மில்லியன் லைக்குகளை கடந்துள்ளது.

விஜய் தான் டாப்

தென்னிந்திய சினிமா நடிகர்களிலேயே நடிகர் விஜய்யின் வீடியோக்கள் இதுவரை 7 முறை ஒரு மில்லியன் லைக்குகளை யூடியூபில் பெற்று சாதனை படைத்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக அல்லு அர்ஜுன் வீடியோக்கள் 3 முறையும் நடிகர் தனுஷின் வீடியோக்கள் 2 முறையும், தல அஜித்தின் வீடியோ ஒரு முறையும் 1 மில்லியன் லைக்குகளை அள்ளி உள்ளன.

வெறித்தனம்

கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் மாஸ்டர் படம் ரிலீசாகி, வாத்தி கம்மிங் வீடியோ பாடலையே விஜய் ரசிகர்கள் கண்டு ரசித்து தங்களின் வெறித்தனமான கொண்டாட்டத்தை காட்டி இருப்பார்கள். மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானால் மற்றொரு ஒரு மில்லியன் சாதனை விஜய்யின் வீடியோ அசால்ட்டாக படைக்கும் என்றும் ரசிகர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X