தளபதி விஜய்யின் பிறந்தநாள்… வாழ்த்துக்களை தெறிக்க விடும் திரைப்பிரபலங்கள் !

சென்னை: தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

Malavika Mohanan -உடன் Theaterல் படம் பார்த்த Thalapathy Vijay | Sweet Secrets

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் தளபதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் அமைதியான முறையில் ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதல் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடனும், நள்ளிரவு வெளியான இரண்டாவது போஸ்டரில் வாயில் சிகரெட் கையில் துப்பாக்கி என மாஸாக கெத்துக்காட்டி உள்ளார்.

தெறிக்கும் வாழ்த்து

தெறிக்கும் வாழ்த்து

விஜயின் பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் அதை ஒரு திருவிழாப்போல கொண்டாடுவார்கள். தற்போது பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளதால், சமூக வலைதளத்தில் விதவிதமான ஹேஷ்டேக்குகள், வீடியோ க்ளிப்பிங்ஸ் விஜய் படங்கள், பாடல் என தெறிக்க விட்டுவருகின்றனர்.

பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், இந்த ஜோடியை திரையில் காண ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பீஸ்ட் ரசிகர்களுக்கு விருந்து

பீஸ்ட் ரசிகர்களுக்கு விருந்து

நடிகை கீர்த்தி சுரேஷ், பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பீஸ்ட் நான் உட்பட ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று கூறி பிறந்த நாளை வாழ்த்து கூறியுள்ளார்.

என்றென்றும் மகிழ்ச்சியுடன்

என்றென்றும் மகிழ்ச்சியுடன்

நடிகை அனுஷ்கா ஷெட்டி, பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய், உங்களுக்கு நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியையும் என்றென்றும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி

பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி

இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் East or West You are the Beast என்று கூறிய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். எல்லைகளை தள்ளிக்கொண்டே இருங்கள், எங்களுக்கு பெருமை சேருங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X