தளபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்! திரையரங்குகளில் தி கோட் ஷாட்ஸ் ரிலீஸ்!
சென்னை: இன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் விஜய் (Vijay Birthday) தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் உச்ச நடிகராக இருந்துவரும் வேளையில், சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக செயல்படவுள்ளேன் என தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கிய தினத்தில் அறிவித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் தி கோட் படம் உருவாகி வருகின்றது. படத்தின் சி.ஜி. வேலைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே பதற்றத்திற்கு ஆளானது. இந்த சம்பவத்தையொட்டி நடிகர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுமட்டும் இல்லாமல் கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். விஜய்க்கு இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி 50வது பிறந்த நாள். தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் த.வெ.க.,வினர் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் உத்தரவிட்டிருந்தார்.

ரீ ரிலீஸ்: விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட கத்தி, துப்பாக்கி, போக்கிரி, கில்லி, மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இதனை ரசிகர்கள் கொண்டாடிய வீடியோக்களும் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தொடங்கி திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தி கோட் அப்டேட்: ஆனாலும் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தி கோட் படத்தின் அப்டேட்டுகளை மாறி மாறி படக்குழு வெளியிட்டு வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், இன்று சின்ன சின்ன கண்கள் பாடலும் வெளியாகவுள்ளது. இந்த பாடலை விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி பாடியுள்ளனர். பவதாரிணியின் குரல் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல் தொடர்பான அப்டேட்டுகளை விஜய்யும் வெளியிட்டு வருவது, பிறந்த நாள் கொண்டாட்டத்தினை வேண்டாம் எனக் கூறிவிட்டு விஜய் தி கோட் படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுக்கின்றாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

விஜய் பேச்சைக் மதிக்காத ரசிகர் மன்றத் தலைவர்: அதேநேரத்தில் சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஈ.சி.ஆர்., சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்றதாக கூறப்படும் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு சிறுவன் உட்பட இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. விஜய்யின் உத்தரவை விஜய் ரசிகர் மன்றத் தலைவரே மதிக்காததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் தி கோட் படத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ் திரையரங்குகளில் இடைவேளைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக பார்க்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











