Thalapathy 63 வதந்திகளை நம்பாதீங்க, அப்டேட் சரியான நேரத்தில் வரும்
சென்னை: தளபதி 63 படம் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 63. படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன் கதை, ஸ்க்ரிப்ட்டை அட்லி திருடி விட்டார் என்று குறும்பட இயக்குநர் செல்வா தெரிவித்துள்ளார்.
தளபதி 63 பட செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது.

தளபதி 63
தளபதி 63 பற்றி அடிக்கடி ஏதாவது வதந்தி பரவிக் கொண்டே இருக்கிறது. அட்லி புகார்களை மட்டும் அல்ல வதந்திகளையும் கண்டுகொள்ளாமல் படப்பிடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய்
70 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு, 4வது கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அப்டேட்டுகள், அறிவிப்புகள் தக்க சமயத்தில் வெளியிடப்படும். அது வரை வதந்திகளை நம்பாமல் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டுகிறோம் என்று விஜய் மற்றும் அட்லியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அப்டேட்
தளபதி 63 பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தவிர விஜய் ரசிகர்களுக்கு வேறு எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை. படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுங்க அட்லி என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கதை திருட்டு
கதை திருட்டு வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த பிரச்சனை குறித்து அட்லி என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











