Thalapathy 63: தரணி ஆள வா தளபதி, முருகதாஸ் வெளியிட்ட விஜய் பிறந்தநாள் டிபி.. தெறிக்கவிடும் ரசிகர்கள்

விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ள போஸ்டர் ஒன்று டிரெண்டிங் ஆகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் உருவாக்கிய காமென் டிபி ஒன்றை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது அவர் அட்லீ இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

நாளை மறுதினம் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர் உருவாக்கிய போஸ்டர்:

ரசிகர் உருவாக்கிய போஸ்டர்:

இந்நிலையில் விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக ரசிகர் ஒருவர் மெர்சலான போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூகவலைதளப் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் ‘தரணி ஆள வா தளபதி' என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.

மலையாள ரசிகர்கள்:

மலையாள ரசிகர்கள்:

இந்தப் புகைப்படத்தை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் காமென் டிபியாக விஜய் ரசிகர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. மலையாள ரசிகர்கள் இந்த போஸ்டரை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் போஸ்டரில் சென்னை கத்திப்பாரா மேம்பாலம், தஞ்சாவூர் பெரிய கோவில், திருவள்ளுவர் சிலை போன்றவை உள்ளன.

இணையத்தில் வைரல்:

இணையத்தில் வைரல்:

இந்த போஸ்டரானது கூடை பந்தை மையப்படுத்தி வெளியான ஒரு படத்தின் போஸ்டரில் இருந்து தழுவி உருவாக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் புகைப்படத்திலும் இதே சிகப்பு நிற ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே, அந்தப் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

டிரெண்டிங்:

டிரெண்டிங்:

அதோடு #ThalapathyBDayCDP என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இன்றைக்கே இப்படியென்றால் விஜய் பிறந்தநாளன்று தளபதி 63 பட அப்டேட்டுகளும் வந்து விட்டால், டிவிட்டரை தெறிக்க விட்டு விடுவார்கள் விஜய் ரசிகர்கள் என்பது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X