'தளபதி 63' படத்தோட பெயர் என்ன தெரியுமா? அட, நீங்களே கெஸ் பண்ண சூப்பர் சான்ஸ்
சென்னை: என்ன தளபதி ரசிகாஸ்.. நீங்க செம எதிர்பார்ப்போடு காத்திருப்பது 'தளபதி 63' படத்தின் டைட்டிலுக்காகத்தானே. உங்களுக்கு பிடிச்ச மாதிரி, மாஸ்ஸா ஒரு டைட்டில் வருமேன்னு, ஃபிங்கரை கிராஸ் பண்ணிட்டு, ஜூன் 21ம் தேதி, அதாங்க நாளைக்கு சாயங்காலம் 6 மணி எப்போ வரும்னு நீங்க காத்துகிட்டு இருக்குறது நல்லாவே தெரியுது.
சர்கார் படத்துக்கு பிறகு, நம்ம ஸ்டைலிஷ் இயக்குநர் அட்லி கூட மீண்டும் விஜய் சேர்ந்துள்ள படம்தான் இது. ஏற்கனவே, இதே கூட்டணியில் வெளியான, தெறி, பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிட்டது, இந்த படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கு.

இதுவரை தளபதி 63 அப்படீன்னு, விஜய் நடிச்ச படத்தோட எண்ணிக்கையை வச்சி, இந்த படத்தை கூப்பிட்டுகிட்டு இருக்கும் ரசிகாஸ், நாளைக்கு, படத்தோட பேரு ரிலீசானதும், டைட்டில, வேல்டு லெவல்ல டிரெண்ட் பண்ணப்போறீங்கங்கிறது தெரிஞ்ச விஷயம்தான்.
தெறி, மாதிரி தெறிக்கவிடுற ஒரு டைட்டில்தான் வரும்னு நீங்க எதிர்பார்ப்பீங்க. அது ஏன் நீங்க செலக்ட் பண்ற டைட்டிலா இருக்க கூடாது. அல்லது நீங்க ஏன் அதை சரியா கணிச்சி, உண்மையான தளபதி ஃபேன் அப்படீங்கிறத இந்த உலகத்துக்கு காட்டக் கூடாது? அட ஆமாங்க, படத்தோட பேரு என்னவா இருக்கனும்னு நீங்களே சொல்லுங், நம்ம கமெண்ட் பாக்ஸ்ல.
படத்தோட பெயர் எப்படி இருக்கனும்னு சொல்லி, கீழையே உங்களோட பெயரையும், ஊரையும் கமெண்ட்ல பதிவு பண்ணுங்க. கண்டிப்பா படக்குழுவோட கவனத்திற்கு இது போகும். நீங்க கரெக்ட்கா படத்தோட பெயரை கெஸ் பண்ணிட்டா, அடுத்த நிமிஷமே உலக ஃபேமஸ் ஆகிருவீங்க. என்ன நண்பா, நண்பீஸ்.. ரெடியா?
ம்.. ஆரம்பிங்க. உங்க நண்பர்களுக்கும், ஷேர் பண்ணுங்க. படத்தோட பெயரை கமெண்ட் போடச் சொல்லுங்க. ஐ அம் வெய்ட்டிங்!


Click it and Unblock the Notifications











