Thalapathy 63 கதை சுட்டது என்பது எப்படி தெரிய வந்தது?: செல்வா விளக்கம்

By Siva

Recommended Video

அட்லி கதையை திருடியது பற்றி செல்வா விவரித்துள்ளார்

சென்னை: தன் கதையை அட்லி திருடியது எப்படி தனக்கு தெரிய வந்தது என்று குறும்பட இயக்குநர் செல்வா விவரித்துள்ளார்.

விஜய்யை வைத்து அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் செல்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செல்வா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது,

வழக்கு

வழக்கு

நான் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் டைம் இருப்பதால் அதுவரை என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள் சங்கத்தை தான் முதலில் அணுகினேன். அவர்கள் என் புகாரை நிராகரித்துவிட்டனர். அதன் பிறகே நான் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கின் முதல் விசாரணை ஏப்ரல் மாதம் நடந்தது.

அட்லி

அட்லி

எனக்கு அட்லியை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் இருவருக்கும் பொதுவான ஆட்கள் உள்ளனர். அட்லி பட கதை என் கதையை போன்றே உள்ளது என்று எனக்கு தெரிந்த ஒருவர் கூறினார். இதையடுத்து அட்லியை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரின் மேனேஜர்கள் என்னை அவரை அணுகவிடவில்லை. அட்லியின் மேனேஜர்கள் வேண்டும் என்றே என்னை அவரை பார்க்க விடாமல் செய்வதை உணர்ந்தேன்.

ஸ்க்ரிப்ட்

ஸ்க்ரிப்ட்

கருவை மட்டும் பார்க்காமல் இரண்டு பட ஸ்க்ரிப்ட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதே நான் நீதிமன்றத்திடம் வைத்துள்ள கோரிக்கை. நான் எழுதி வைத்த 265 பக்க ஸ்க்ரிப்ட்டை அட்லி பயன்படுத்தியுள்ளார். அதனால் தான் நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளேன் என்கிறார் செல்வா.

தளபதி 63

தளபதி 63

கதை திருட்டு தொடர்பாக அட்லி தரப்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. அட்லி அமைதியாக உள்ளார். தளபதி 63 படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X