twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts

    By Siva
    |

    சென்னை:

    தளபதி 63 படத்தின் வேலை பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

    தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து அட்லி, விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் தளபதி 63. இந்த படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.

    பூஜையில் விஜய் கலந்து கொண்டார். இதையடுத்து படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.

    பூஜை

    தளபதி 63 பூஜையின்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரின் வாழ்த்துக்களை கேட்டுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா.

    விவேக்

    விவேக்

    தளபதி 63 படத்தில் விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். அதனால் காமெடிக்கு குறைவே இருக்காது என்று கூறலாம். மேலும் பரியேறும் பெருமாள் படம் புகழ் கதிர், ரோபோ ஷங்கரின் மகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய்

    தளபதி 63 பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு தளபதி தீபாவளிக்காக வெயிட்டிங் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    விஜய் ரசிகர்கள் தளபதி 63 பற்றி #Thalapathy63KickStarts என்ற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்கிறார்கள். இதனால் அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகியுள்ளது.

    English summary
    Thalapathy 63 has kick started with Pooja on sunday. This is Vijay-Atlee's third collaboration after Theri and Mersal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X