தளபதி 63 செட்டில் பயங்கர தீ விபத்தா?: உண்மை இதோ
சென்னை: தளபதி 63 செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான செய்திகள் குறித்த உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 63. இந்நிலையில் கோடிக் கணக்கில் செலவு செய்து போடப்பட்ட தளபதி 63 செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக ட்விட்டரில் ஆளாளுக்கு பேசினார்கள்.
அந்த தீ விபத்தில் செட் முழுவதும் எரிந்து நாசமானதாகவும், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.
தீ விபத்து
உண்மையில் தளபதி 63 பட செட்டில் எந்த தீ விபத்தும் ஏற்படவில்லை என்று படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பிலும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
தளபதி 63
தளபதி 63 படத்தின் ஷூட்டிங் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவுகிறது. அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல்
தீ விபத்து ஏற்பட்டது தளபதி 63 பட செட்டில் இல்லை மாறாக மெர்சல் படத்திற்காக போடப்பட்டது என்று கூறப்படுகிறது. ரசிகர்களே, யாரும் பயப்பட வேண்டாம், தளபதி 63 ஷூட்டிங்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சேட்டை
விஜய் பட செட்டில் பயங்கர தீ விபத்து என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. ஏற்கனவே சில பல பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வதந்தி வேறு.


Click it and Unblock the Notifications











