கதிர் கொலைக்கு பழி வாங்கும் விஜய்: இது தான் தளபதி 63 கதையா?
சென்னை: தளபதி 63 படத்தின் கதை சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அட்லி, விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் தளபதி 63. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் கதை கசிந்துள்ளது.

விஜய்
தளபதி 63 படத்தில் விஜய் மற்றும் கதிர் கால்பந்தாட்ட வீரர்களாம். நெருங்கிய நண்பர்களான அவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வெல்கிறார்களாம். ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் இருவரும் கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளர்கள் ஆகிறார்களாம்.

கொலை
பயிற்சியாளரான பிறகு கதிர் மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறாராம். அவரின் கொலை விசாரணையில் போலீசார் மெத்தமானக இருக்கிறார்களாம். இதை பார்த்த விஜய் தானே களத்தில் இறங்கி குற்றவாளிகளை கண்டிபிடிக்கிறாராம்.

பழி வாங்குதல்
களத்தில் இறங்கியபோது தான் கதிரின் கொலைக்கு பின்னால் சதி இருப்பதை அறிந்து விஜய் அதிர்ச்சி அடைகிறாராம். நண்பனை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்குகிறாராம். மேலும் கதிரின் அணிக்கு பயிற்சியாளராக மாறி அந்த அணியை வெற்றி பெற செய்கிறாராம்.

அட்லி
தளபதி 63 படத்தின் கதை இது தான் என்று சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். பாலிவுட் படம் ஒன்றின் கதையை அட்லி சுட்டுவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இந்த கதை வித்தியாசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











