தளபதி 63 படத்தோட டைட்டில் இதுதானா? அதகளப்படுத்தும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: 'தளபதி 63' திரைப்படத்தின் டைட்டில் நாளை வெளியிடப்படும் என்று படக் குழு சொன்னாலும் சொல்லிச்சி, ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை.
தெறி, மெர்சல் என மிரட்டல் கலந்த வித்தியாசமான தலைப்பை சூட்டி, மாஸ் காட்டியவர் அட்லி. அவரோடு விஜய் இணையும் அடுத்த படம் என்பதால், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், ஒரு டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள்.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த டைட்டிலை சொல்லுமாறு, நமது இணையதளத்தில் கேட்டிருந்தோம். வந்து குவியத் தொடங்கியுள்ளது ரசிகர்கள் பரிந்துரைகள். சும்மா சொல்லக் கூடாது, நமது வாசகர்களை. மிரட்டலான படத் தலைப்புகளைத்தான் பரிந்துரை செய்துள்ளார்கள்.
பெரும்பாலான ரசிகர்கள் (வாசகர்கள்), எதிர்பார்ப்பு, படத்தின் பெயர், 'பிகிலு' என்பதாகத்தான் உள்ளது. ஜெயபால், தனசேகரன், திருவரசன் ஆகியோர் பிகிலு என்பதுதான் படத்தோட பெயரா இருக்கும்னு அடிச்சி சொல்றாங்க. சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்ற, சிம்டாங்காரன் பாடலில் இந்த வார்த்தை வரும். அத்தோடு, தளபதி 63 படத்தில், விஜய் கதாப்பாத்திரத்தின், செல்ல பெயரும் பிகிலு எனச் சொல்லப்படுகிறது.
விகடன் என்ற நமது வாசகர் இப்படி ஒரு படத் தலைப்பை பரிந்துரைத்துள்ளார். நேற்று முதல்வர், இன்று இந்திய பிரதமர், நாளைய அமெரிக்க ஜனாதிபதி. இப்படி ஒரு தலைப்பு. இதுல உள்குத்து ஏதும் இருக்குமோ (?).
ஜமால் முஸ்தபா என்ற வாசகர், படத்தின் பெயர் 'வெறி' என்று சொல்கிறார். வெறித்தனமா யோசிக்கிறீங்களேப்பா. பலே.
சையது என்ற வாசகர், படத்தின் பெயர், வெறித்தனம், அதகளம் என பரிந்துரைக்கிறார். உண்மையாவே வெறித்தனம்தான் போங்க.
ஆனந்த் என்ற வாசகர், அதிரிபுதிரி. என்ன பேரு தெரியுமா, CM. அது சரி, உங்களுக்கு என்ன கோபமோ தெரியல விஜய் மீது?
சக்தி என்ற வாசகர், சொல்லும், தலைப்பு டாப். அந்தர். நல்ல தலைப்புதான். அந்தர் பண்ணிட்டீங்க.
படக் குழுவினரே, விஜய் ரசிகர்கள் சொல்லும் இந்த டைட்டிலையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த படத்துக்கு ஏற்கனவே ஒரு பெயரை ஃபிக்ஸ் செய்துவிட்டாலும், 'தளபதி 64' திரைப்படத்திற்கு கூட உதவலாம்.


Click it and Unblock the Notifications











