'தளபதி 63': எச்.ராஜாவுக்கு செம பதிலடி கொடுக்கப்போகும் விஜய்.. வெளியான பரபர தகவல்

Recommended Video

Thalapathy 63 Update: மெர்சலை போலவே, எச்.ராஜா தூக்கத்தை கெடுக்கும் 'தளபதி 63'- வீடியோ

சென்னை: 'தளபதி 63' திரைப்படம், மெர்சலை போலவே, எச்.ராஜா தூக்கத்தை கெடுக்கப்போகுது என்று கண் சிமிட்டுகிறார்கள், படக் குழு வட்டாரத்தில்.

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம், மெர்சல். இதில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான வசனங்கள், கோயிலுக்கு பதில், மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது போன்ற வசனங்கள், பாஜகவினரை கொதிப்படைய செய்துவிட்டது என்றால் பார்த்துக்கோங்க.

அதிலும், நம்ம எச்.ராஜா.. அதாங்க, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு, கார்த்தி சிதம்பரத்திடம் கொஞ்ச நாள் முன்னாடி கூட தோத்துப்போனாரே, அதே எச்.ராஜாதான்.

ஜோசப் விஜய்

ஜோசப் விஜய்


படத்தில் இடம் பெற்ற கருத்துக்கு பதில் சொன்னால் கூட பரவாயில்லை. தளபதி விஜயை பார்த்து ஜோசப் விஜய்னு சொல்லி, மதச் சாயம் பூசினார் ராஜா.
விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, லெட்டர் பேடு ஆகியவற்றையும் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அநாகரிகத்தை தொடர்ந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

ஆமா நான் ஜோசப் விஜய்தான்

ஆமா நான் ஜோசப் விஜய்தான்

கைராசிக்காரர் போல. படம் மெகா ஹிட் அடித்தது. இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் மெர்சல் திரைப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி; ஆதரவு தந்த தலைவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கை வெளியிடப்பட்ட, லெட்டர் பேடிலும் கூட ஜோசப் விஜய் என்ற பெயரை பயன்படுத்தியிருந்தார் விஜய்.

பதிலடி

பதிலடி

நான் ஜோசப் விஜயாகவே இருந்தாலும், ரசிகர்கள், என்மீது அதே அன்போடுதான் இருப்பார்கள் என்று, ராஜாவுக்கு பதிலடி கொடுப்பதை போல இருந்தது அந்த அறிக்கை. இந்த நிலையில், மீண்டும், அதே அட்லி-விஜய் கூட்டணி, ராஜாவின் தூக்கம் கெடுக்க ரெடியாகிவிட்டது.

ஜோசப் மட்டுமில்ல, மைக்கேலும்தான்

ஜோசப் மட்டுமில்ல, மைக்கேலும்தான்

விஜய் நடிக்கும் 63வது திரைப்படத்தின் பெயர் நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் கதாப்பாத்திரம் அதில் ஒன்றாம். அந்த கதாப்பாத்திரத்தின் பெயர் மைக்கேல் என வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. பிஜிலு என்ற செல்லப்பெயரும் உண்டாம். ஹீரோயின் நயன்தாரா கதாப்பாத்திர பெயர் ஏஞ்சல் என வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதே பாணி

அதே பாணி

ஜோசப் விஜய் என அழைத்தவர்களுக்கு, அதே பெயரில் முதல் முறையாக லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டவர் விஜய். இப்போது, எந்த அடையாளத்திற்குள் தன்னை அடைக்கப்பார்க்கிறார்களோ, அதே கிறிஸ்தவ அடையாள பெயருடன், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதுக்கு பெயர்தான் தளபதி பாணி பதிலடியோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X