Thalapathy 63: தளபதி 63 கதை லீக்... யார் அந்த கருப்பு ஆடு... தீவிர விசாரணையில் இறங்கிய படக்குழு!

கதை கசிந்த விவகாரம் தொடர்பாக தளபதி 63 படக்குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதை லீக்கானது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Thalapathy 63: Who is that blacksheep?

இப்படத்தின் கதை சமீபத்தில் வெளியே கசிந்தது. அதாவது, படத்தில் நெருங்கிய நண்பர்களான விஜய் மற்றும் கதிர் இருவரும் கால்பந்தாட்ட வீரர்கள். நண்பர்கள் இருவரும் கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளர்கள் ஆகிறார்கள். திடீரென கதிர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்குவதற்காக, விஜய் தனது அணியை ஜெயிக்க வைக்கிறார்.

இந்த கதை வெளியே எப்படி கசிந்தது என்பது குறித்து படக்குழு தீவிரமாக விசாரித்து வருகிறது. தங்களுக்குள் இருக்கும் கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க, இயக்குனர் அட்லி தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

சர்கார் கதை விவகாரம் போலவே, இந்த படத்திற்கும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டது. உதவி இயக்குனர் ஒருவர் இந்த கதைக்கு உரிமை கோரியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் கதை கசிந்ததால், படக்குழு செம அப்செட்டில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X