தளபதி ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. சென்னையில ‘தளபதி 64’ ஷூட்டிங் நடக்குது!
Recommended Video
சென்னை: டிசம்பர் 1 முதல் கர்நாடகாவின் ஷிமோகாவில் 'தளபதி 64' ஷூட்டிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 'தளபதி 64' ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் சென்னையில் ஒரு ஷாட் ஷெட்யூல் இன்று தொடங்கி உள்ளது.
'தளபதி 64' படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 'தளபதி 64' படக்குழுவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
ஷிமோகா
டெல்லி ஷூட்டிங்கை தொடர்ந்து கர்நாடகாவின் ஷிமோகா எனும் இடத்தில் தொடர்ந்து 50 நாட்கள் ‘தளபதி 64' ஷூட்டிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தனை நாட்கள்
டிசம்பர் 3ம் தேதி (இன்று) சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘தளபதி 64' ஷூட்டிங் டிசம்பர் 7 அல்லது 8ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் என்றும் 10ம் தேதிக்கு மேல் கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடை இயக்குநர்
லோகேஷ் கனகராஜின் நண்பரான ஆடை இயக்குநர் ரத்தினவேல் ‘தளபதி 64' படத்துக்கான திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணிகளை லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கவனித்து வருகிறார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ‘தளபதி 64' குறித்த அப்டேட்களையும், ட்வீட்களையும் பதிவிட்டு விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறார்.
எந்த லொக்கேஷன்
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், செளந்தர்யா, ஸ்ரீநாத், ஸ்ரீமன், பிரேம் என நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் ‘தளபதி 64' படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது என்றதும், விஜய் ரசிகர்கள், தளபதியை பார்க்கணும், எந்த லொக்கேஷன்னு சொல்லுங்கன்னு ட்விட்டரில் அன்புத் தொல்லைக் கொடுத்து வருகின்றனர்.
கேங்ஸ்டர்
'தளபதி 64' படத்தின் தலைப்பு டாக்டர் என சில வாரங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்த தலைப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘தளபதி 64' படத்துக்கு கேங்ஸ்டர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வ தகவல், வரும் ஆங்கில புத்தாண்டு அறிவிக்கப்படும் என நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











