மாஸ்டர் கிழி.. கிழி.. கிழி.. பிரபுதேவாவின் புதிய முக்காபுலாவை பாராட்டிய தளபதி 64 நடிகர்!

மாஸ்டர் கிழி.. கிழி.. கிழி.. பிரபுதேவாவின் புதிய முக்காபுலாவை பாராட்டிய தளபதி 64 நடிகர்!

சென்னை: பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ட்ரீட் டான்சர் 3ம் பாகம் வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முக்காலா முக்காபுலா ரீமேக் பாடலுக்கு நடிகர் பிரபுதேவா மீண்டும் ஒரு அசத்தல் நடனத்தை போட்டுள்ளார்.

அந்த நடனத்தை பார்த்த நடிகர் சாந்தனு, பிரபுதேவா மாஸ்டர் கிழி.. கிழி.. கிழி.. என பாராட்டி தள்ளியுள்ளார்.

தளபதி 64

தளபதி 64

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடித்து வருகிறார். ஷிமோகாவில் நடைபெற்று வரும் 4ம் கட்ட ஷூட்டிங்கில் நடிகர் சாந்தனு பங்கேற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ட்ரீட் டான்சர் 3டி

ஸ்ட்ரீட் டான்சர் 3டி

ரெமோ டி சோஸா இயக்கத்தில் பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் ஸ்ட்ரீட் டான்சர் 3டி படம் உருவாகி வருகிறது. முதல் இரு பாகங்களும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி 3ம் பாகம் 3டியில் வெளியாகிறது.

காதலன்

காதலன்

ஷங்கர் இயக்கத்தில் 1994ம் ஆண்டு பிரபுதேவா, நக்மா நடிப்பில் வெளியான காதலன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வாலி எழுதிய முக்காலா முக்காபுலா பாடல் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் அதே எனர்ஜியுடன் ரசிக்கப்படும் பாடலாக இருக்கிறது. இந்த பாடலில் அப்பவே பிரபுதேவா அந்த ஆட்டம் போட்டிருப்பார்.

25 வருஷம் கழித்து

முக்காலா முக்காபுலா பாடல் வெளியாகி இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல மேடைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளிலும் ஏ.ஆர். ரஹ்மான் இந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இந்நிலையில், 25 வருஷம் கழித்து மீண்டும் இந்த பாடலை புதுமைப் படுத்தி நடனம் அமைத்து, பிரபுதேவாவே ஆடியுள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சாந்தனு பாராட்டு

ஸ்ட்ரீட் டான்சர் 3டி படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலின் வீடியோ நேற்று படத்தின் புரொமோஷனாக வெளியானது. பாடலை பார்த்த பலரும் பிரபுதேவாவின் ஆட்டத்தை கண்டு மெய் சிலிர்த்து பாராட்டி வருகின்றனர். நடிகர் சாந்தனுவும் இந்த பாடலை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் கிழி.. கிழி.. கிழி.. பிரபுதேவா.. என்ன ஒரு எனர்ஜி வேற லெவல் என கமெண்ட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X