ராவடி பண்ணும் புள்ளி்ங்கோ.. ’தளபதி 64’ நாயகிக்கு இப்படியொரு கொலை மிரட்டல்!

டெல்லி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்து வரும் தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்து வருகிறது.

காற்று மாசு காரணமாக டெல்லியை விட்டு வேறு இடத்துக்கு 'தளபதி 64' ஷூட்டிங் மாற்றப்படுவதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதாவது, டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் மாளவிகா மோகனன் கலந்து கொண்ட தகவலை தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

யாருக்கு ஜோடி?

'தளபதி 64' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறீங்களா இல்லை விஜய் சேதுபதிக்கு ஜோடியா நடிக்கிறீங்களா என விஜய் ரசிகர் ஒருவர் மாளவிகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாக, சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா தமிழில் அறிமுகமானதால், ரசிகர்களிடையே இந்த கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பட பூஜை போட்டோக்களை பார்த்தாலே மாளவிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற விஷயம் தெளிவாக தெரியும்.

மீண்டும் ஹீரோயின்

லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் கைதி படத்தில், எந்தவொரு ஹீரோயினோ, பாடலோ இல்லாமல் படம் வெளியானது.

என்ன லுக்

தளபதி 64 படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மாளவிகா மோகனன், பேட்ட படத்தில் வந்தது போன்று, சேலை கட்டிய லுக்கில் வருவாரா, அல்லது மாடர்ன் லுக்கில் வருவாரா என்ற சந்தேகத்தால், இந்த ரசிகர், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை ஷேர் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

கொலை மிரட்டல்

விஜய் முகம்மது எனும் ரசிகர், பிகில் ராயப்பன் கேரக்டர் புகைப்படத்தை பதிவிட்டு, தளபதி 64 படத்தில் மாஸா நடிக்கலைன்னா கொன்னுடுவேன்னு செல்லமாக மிரட்டியுள்ளார். இப்படி புள்ளிங்கோவின் அன்பு வலையில் சிக்கித் தவித்து வருகிறார் மாளவிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X