வைரலாகும் ‘தளபதி 64’ நாயகியின் க்யூட் புகைப்படங்கள்!

Recommended Video

Thalapathy 64 Malavika Mohanan: மாளவிகா மோகனன் Recent Photoshoot

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தில் நாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

டெல்லியில் நடிகர் விஜய்யுடன் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் மாளவிகா மோகனன் அண்மையில் முகத்தை மறைத்தவாறு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பதிவிட்ட ஒரு புகைப்படம் விஜய் ரசிகர்களிடையே வைரலான நிலையில், தற்போது, முழு அழகையும் காட்டி, க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாடல்

மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என நான்கு மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி ஃபேஷன் உலகிலும் மாளவிகாவுக்கு ஆர்வம் அதிகம். ஃபெமினா, மிஸ் இந்தியா உள்ளிட்ட ஃபேஷன் நிகழ்ச்சிகளில் மாடலாகவும் அவ்வப்போது கலக்கி வருகிறார்.

அப்படியே தூக்கி கொஞ்சலாம்

மாளவிகா மோகனன், இரு தினங்களுக்கு முன்பாக, தனது குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீல நிற பாவடை சட்டையில், பாப் கட் ஹேர்ஸ்டைலில் கள்ளங் கபடம் இல்லாத குழந்தை சிரிப்புடன் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள், மாளவிகாவை அப்படியே தூக்கி கொஞ்ச போய்விடுவார்கள்.

ஹோம்லி

பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் சசிகுமாருக்கு ஜோடியாகவும் தமிழில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். ‘தளபதி 64' படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா, எப்படி செட் ஆகும் என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், தான் ஹோம்லி மட்டுமல்ல என படு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தளபதி ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கிரங்கடித்து வருகிறார்.

தளபதி 64

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64' படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய், ஆசிரியராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில், ஐடி கார்டுடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் லீக்காகின இதனால், விஜய் மாணவராக நடிக்கிறாரா இல்லை ஆசிரியரா என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி

'தளபதி 64' படத்தில் இதுவரை நடிகர் விஜய்சேதுபதி நடிக்க தொடங்கவில்லை என்றும், வரும் டிசம்பர் மாதம் முதல் விஜய்சேதுபதி ‘தளபதி 64' ஷூட்டிங்கில் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், வரும் பிப்ரவரி மாதம் படத்தின் ஷூட்டிங் முடிந்து ஏப்ரலில் ரிலீசுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X