பிகில் படத்தை கண்டு ரசித்த கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Recommended Video

Bigil Vs Kaithi Box Office : வெறித்தனம் ஓயவில்லை, நிரம்பி வழியும் கூட்டம்-வீடியோ

சென்னை: விஜய் நடிக்கும் தளபதி 64 திரைப்படத்தை இயக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து, போரூரில் உள்ள ஜி.கே.சினிமாஸ் திரையரங்கில் 'பிகில்' திரைப்படத்தை கண்டு களித்தனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜின் கைதி படம் ரிலீஸாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பிகிலுடன் கைதி படம் வருகிறது என்று பிகிலை எதிர்பார்த்த அனைவரும் கைதி படத்தையும் எதிர்பார்த்தனர்.

Thalapathy 64 crew who enjoyed watching bigil

கைதியின் முன்னோட்டம் சுவாரஸ்யமாக இருந்ததே, இப்படத்திறக்கான எதிர்பார்ப்பாய் இருந்தது. மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்திருக்கும் படம் கைதி. இந்த படம் தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படத்துடன் வெளியிடப்பட்டது.

இந்த படத்திற்கு கதாநாயகி இல்லை. மற்றும் இப்படத்தில் பவர் பா.பாண்டி, தும்பா படங்களில் நடித்த கலக்கப்போவது யாரு தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் சத்யன் சூர்யன்.

இவர் யுத்தம் செய், மாயா, அடங்க மறு, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்து இருக்கிறார் பிலோமின் ராஜ்.

கைதியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயின் 64 படத்தை இயக்க உள்ளார் இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் மூலம் தயாரித்து வருகிறார் சேவியர் ப்ரிட்டோ.

தற்போது, நேற்று பிகில் படத்தை தளபதி 64 படக்குழுவினர் அனைவரும் சென்னை போரூரில் உள்ள ஜி.கே.சினிமாஸ் திரையரங்கில் படத்தை பார்த்துள்ளனர். திரையரங்கில் படம் பார்க்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இசையமைப்பாளர் அனிரூத், நடிகர் சாந்தனு உள்ளிட்ட படக்குழுவினர் படத்தை பார்த்தனர். அதோடு இவர்களுடன், பிகில் படத்தில் நடித்த கதிரும் படத்தை பார்த்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X