டார்க் டெவில் மோடில் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்.. மறைமுகமாக தகவலை கசியவிட்ட கோபி பிரசன்னா?
சென்னை: தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் டார்க் டெவில் மோடில் வெளியாகவுள்ள தகவலை மறைமுகமாக ட்வீட் போட்டு டிசைனர் கோபி பிரசன்னா வெளிப்படுத்தியுள்ளார்.
தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் டார்க் மோடில் உருவாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் தெறி, மெர்சல், சர்கார், கத்தி, பிகில் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்த பிரபல டிசைனர் கோபி பிரசன்னா தான் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டிசைன் செய்துள்ளார்.
கோபி பிரசன்னா ட்வீட்
ஆமாம்.. ஆமாம்.. எல்லாரும் உங்க போனை சார்ஜ் போட்டு வச்சிக்கோங்க.. ஃபுல் பிரைட்னஸ் ப்ளீஸ் என தளபதி ரசிகர்களுகு ட்வீட் போட்டு சிக்னல் கொடுத்துள்ளார் கோபி பிரசன்னா.

ஃபுல் பிரைட்னஸ் எதற்கு?
தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ஃபுல் டார்க் டெவில் மோடில் வெளிவர உள்ளதை மறைமுகமாக வெளிப்படுத்தவே டிசைனர் கோபி பிரசன்னா இந்த ட்வீட்டை போட்டுள்ளார் என்பது தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் அதன் உண்மை தெரிந்துவிடும்.
வா தலைவரே
தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்கையும் கோபி பிரசன்னா தான் செய்கிறார் என்பதை அறிந்த தளபதி ரசிகர்கள் வா தலைவரே என ட்வீட் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
இதுதான் செமயா இருக்கு
பிகில் படத்தின் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு இதுதான் செமயா இருக்கு இதுபோல தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இருக்கணும்னு இந்த ரசிகர் ரெக்வஸ்ட்.
கரெக்டா இருக்கு
அதெல்லாம் சொல்லவா வேணும் கரெக்டா இருக்கு என தனது மொபைல் போன் ஃபுல் சார்ஜரில் இருப்பதை இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
வெறித்தனமா ஆக்கிட்டீங்களே
அய்யோ வெறித்தனத்துக்கு மேல வெறித்தனமா ஆக்கிட்டீங்களே என இவர் ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











