அதிரடி ஆக்‌ஷனில் அதகளம் செய்யும் ’தளபதி 64’ நாயகி.. வைரலாகும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அதிரடியான ஸ்க்ரீன் பிளேக்கு பஞ்சம் இருக்காது.

தளபதி விஜய், விஜய்சேதுபதி என ஆக்‌ஷனில் பட்டையை கிளப்ப இரண்டு மாஸ் ஹீரோக்கள் இருக்கும் நிலையில், நாயகி மாளவிகா மோகனும் அதிரடியில் இறங்கியுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

மேலும், வெள்ளை நிற டாப் மற்றும் கூலர்ஸ் அணிந்து படு மாஸாக உள்ள மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தையும் தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

போலீஸ் கேரக்டரா?

ஒயிட் கலர் டாப்பில், கூலர்ஸ் போட்டுக் கொண்டு காரில் செல்லும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் போல்ட்டான கதாபாத்திரத்தில் மாளவிகா நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட போலீஸ் அதிகாரியாக மாளவிகா நடிக்கலாம் என்று தெரிகிறது.

சண்டை காட்சி

மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனனுக்கு சண்டை காட்சிகளும் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. மாளவிகா மோகனன் அதற்காக ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

நியூ இயர் ஹாலிடே

நியூ இயர் ஹாலிடே

ஷிமோகாவில் ஷூட்டிங்கில் இருந்த நடிகை மாளவிகா மோகனன், நியூ இயர் விடுமுறையை ஆஃப்ரிக்காவில் கழித்து வருகிறார். நியூ இயர் விடுமுறைக்கு பிறகு மீண்டும் தளபதி 64 படப்பிடிப்பில் மாளவிகா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேதா பேக்

தளபதி 64 படப்பிடிப்பில் நடிகர் விஜய்சேதுபதி இணைந்துள்ளார் என்றும், தளபதி 64 லுக்கில் இருக்கும் விஜய்சேதுபதியின் புகைப்படங்களை பதிவிட்டு வேதா பேக் என விக்ரம் வேதா படத்தை போல இந்த படமும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

அப்டேட் எப்போ பாஸ்

அப்டேட் எப்போ பாஸ்

அதேபோல, நடிகர் சாந்தனுவிடமும் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமும் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் எப்போ பாஸ் அப்டேட் எப்போ பாஸ் என வீடியோ மீம்களாக போட்டு தளபதி ரசிகர்கள் அன்புத் தொல்லைக் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X