பட்ஜெட் எகிறியது.. தளபதி 64 படத்திற்கு வந்த பிரச்சனை.. தயாரிப்பு நிறுவனம் வெளியேறுகிறதா?

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் தளபதி 64 படத்தின் தயாரிப்பு நிறுவனம் மாறுவதாக வெளியாகும் தகவல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Thalapathy 64 Pooja : படத்தின் சென்னையில் இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜை-வீடியோ

சென்னை: நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் தளபதி 64 படத்தின் தயாரிப்பு நிறுவனம் மாறுவதாக வெளியாகும் தகவல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

அடுத்த வருடம் மே மாதம் இந்த படம் வெளியாகும். சென்னையில் நடக்கும் கதை இது என்று குறிப்பிடுகிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

யார் தயாரிப்பு

யார் தயாரிப்பு

விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்பவர்தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் நிறைய முக்கிய நடிகர்கள் நடிப்பதால் படம் தொடங்கும் முன்பே பட்ஜெட் எகிறி உள்ளது. நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அதிக அளவில் தொகை செலவாகி இருப்பதாக தயாரிப்பு குழு தரப்பில் கூறப்படுகிறது.

பெரிய நிறுவனம்

பெரிய நிறுவனம்

இதனால் வேறு ஏதாவது பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் படத்தை தள்ளிவிட்டுவிடலாம் என்று தயாரிப்பு குழு நினைத்து வருகிறதாம். பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிடம் படத்தை கொடுத்துவிட தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது என்கிறார்கள்.

ஆனால் மொத்தம்

ஆனால் மொத்தம்

அதே சமயம் சேவியர் பிரிட்டோ மொத்தமாக படத்தின் தயாரிப்பில் இருந்து வெளியேற மாட்டார். இணை தயாரிப்பு போல படத்தை தயாரிப்பார். படத்தின் வசூலில் பங்குகள் பிரிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதனால் படத்தின் தயாரிப்பில் சிக்கல் வருமா என்று விஜய் ரசிகர்கள் பலர் கேள்வி கேட்க தொடங்கினார்கள்.

உண்மை என்ன

உண்மை என்ன

இந்த நிலையில் சேவியர் பிரிட்டோ பெரும்பாலும் தயாரிப்பில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை. கண்டிப்பாக அவர் படத்தை வேறு நிறுவனத்திடம் கொடுக்க மாட்டார். படத்தின் தயாரிப்பு குழு மாறாது என்று சேவியர் பிரிட்டோவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X