தளபதி 64 படத்தின் தலைப்பு இதுவா? சூப்பர்.. லோகேஷ் எடுத்த சூப்பர் முடிவு.. வித்தியாசமா இருக்கே!

நடிகர் விஜயின் தளபதி 64 படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தளபதி 64தான் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது.

தற்போது தளபதி 64 படத்திற்காக விஜய் விடுமுறை இல்லாமல் நடிக்கிறார். ஆமாம் கிட்டத்தட்ட 40 நாட்கள் விஜய் எந்த விடுமுறையும் இல்லாமல் நடிக்கிறார். தளபதி 64 படத்திற்காக அவர் வரிசையாக கால் சீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வில்லன்

என்ன வில்லன்

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி தன்னுடைய படங்கள் பலவற்றை ஒத்திவைத்துவிட்டு அவர் தளபதி 64 படத்தில் நடிக்கிறார்.

என்ன ஹிட்

என்ன ஹிட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மூன்றாவது படமாகும் இது. அவரின் இயக்கத்தில், காரத்தி, நரேன் நடிப்பில் கைதி படம் இந்த தீபாவளிக்கு வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. இந்த விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளது.

எப்படி

எப்படி

பொதுவாக லோகேஷ் கனகராஜ் எடுத்த இரண்டு படங்களும் பல்வேறு விஷயங்களை சுற்றி நகரும் கதையாக இருந்தது. உதாரணமாக மாநகரம் படம் 4 பேரின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதையாகும். கைதி படமும் அதேபோல்தான் லாரி ஓட்டுநர், போலீஸ், சிறுமி, போலீஸ் ஸ்டேஷன் என்று பல விஷயங்களை சுற்றி நடக்கும் கதையாகும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தளபதி 64 படம் பெரும்பாலும் விஜயை மட்டும் சுற்றி சுழலும் கதை என்று கூறுகிறார்கள். அதனால் இந்த படத்திற்கு விஜயின் கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக வைக்க இருக்கிறார்களாம். அதன்படி இந்த படத்தில் விஜயின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்று கூறுகிறார்கள்.

இதுதான் தலைப்பு

இதுதான் தலைப்பு

இதனால் படத்தின் தலைப்பு ஜேம்ஸ் துரைராஜ் என்பதை சுருக்கு ஜேடி என்று இருக்கும் என்று கூறுகிறார்கள். படத்தின் புரொமோஷனுக்கும் இந்த தலைப்பு வசதியாக இருக்கும். விஜய் படத்திற்கு வித்தியாசமான தலைப்பாக இது இருக்கும் என்கிறார்கள்.

இன்று மாலை

இன்று மாலை

இன்று மாலை தளபதி 64 பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. இதனுடன் இந்த படத்தின் தலைப்பு வெளியாகுமா, அல்லது தலைப்பு தனியாக இன்னொருநாள் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X