ஷிவமோகாவில் விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதி.. அடுத்த ஷெட்யூல் எப்போ தெரியுமா?
Recommended Video
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் அடுத்த ஷெட்யூல் கர்நாடகாவில் உள்ள ஷிவமோகாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கைதி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கி வரும் 'தளபதி 64' படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'தளபதி 64' வெளியாகவுள்ள நிலையில், மூன்றாம் கட்ட ஷெட்யூலுக்கு படக்குழு ரெடியாகி வருகிறது.

தளபதி 64
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ், கெளரி கிஷன், ரம்யா, செளந்தர்யா, சேத்தன், பிரேம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் தளபதி 64 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகிறது.

பிக் கிளாஷ்
வழக்கத்துக்கு மாறாக விஜய், அஜித், சூர்யா என மூன்று முன்னணி ஹீரோக்களும் இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்து நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித்தும் சுதா கொங்கராவின் சூரரை போற்று படத்தில் சூர்யாவும் நடித்து வருகின்றனர். இந்த மூன்று படங்களும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை டார்கெட் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கோலிவுட்டில் இதுவரை பார்த்திராத பிக் கிளாஷ் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3வது ஷெட்யூல்
தளபதி 64 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் நடந்து முடிந்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமோகாவில் நடைபெறப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மோதல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்துள்ள விஜய் மற்றும் விஜய் சேதுபதியிடையே பயங்கரமான ஒரு சண்டை காட்சி ஷிவமோகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், இந்த மூன்றாவது ஷெட்யூலில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீசும் இணையவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











