இது வேற லெவல் வெறித்தனம்.. 'தளபதி 64' ரிலீஸ் எப்போ தெரியுமா?

பிகில் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் விஜய் ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமாக தளபதி 64 குறித்த அப்டேட்ஸ்கள் கசிந்து வருகின்றன.

Recommended Video

Bigil Making Scenes : பிகில் பட செட்டில் நடந்த கூத்து-வீடியோ

சென்னை: பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட நாயகிகளும் 'தளபதி 64' படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், 'தளபதி 64' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வசூல் மன்னன்

வசூல் மன்னன்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 6ம் நாளான நேற்றும் பிகில் திரைப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 6ம் நாளான நேற்று மட்டும் 58 லட்சத்திற்கும் மேல் பிகில் வசூல் செய்துள்ளது. 6 நாள் கடந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிகில் படம் 90 கோடி வசூலை ஈட்டியுள்ளதாம்.

தளபதி 64

தளபதி 64

தீபாவளி திருவிழாவாக வெளியான விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கு இந்தியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோன்று கார்த்தியின் கைதி படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 64 படத்திற்கு இப்பவே வியாபாரங்கள் தொடங்கி விட்டதாம்.

லோ பட்ஜெட்

லோ பட்ஜெட்

சமீபகாலமாக நடிகர் விஜய்யின் படங்கள் எல்லாம் 100 கோடி அல்லது 150 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.

ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 64 படம் மிகவும் லோ பட்ஜெட்டில் உருவாக்கப்பட இருக்கிறதாம். கார்த்தியின் கைதி படத்தின் பட்ஜெட் வெறும் 25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

110 நாட்கள்

110 நாட்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படம் வெறும் 66 இரவுகளில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், விஜய்யின் 'தளபதி 64' படத்தை வெறும் 110 நாட்களில் படமாக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் கடுமையாக உழைத்து வருகிறாராம்.

‘கைதி 2' படத்திற்கு வெறும் 30 நாள் கொடுங்க போதும் என லோகேஷ் கனகராஜ் கார்த்தியிடம் கூறியதாக, நடிகர் கார்த்தியே ஃபேஸ்புக் லைவ்வில் பேசும் போது கூறியிருந்தார்.

எப்போ ரிலீஸ்

எக்ஸ்.பி. ஃபிலிம் க்ரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிக்கும் ‘தளபதி 64' படம் அடுத்தாண்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் விஜய் ரசிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ‘தளபதி 64' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னையில் ஷூட்டிங்கை முடித்துள்ள படக்குழு நாளை முதல் டெல்லியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடரவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X