எல்லோரையும் சுத்த விடும் மாஸ்டர்.. விஜய் பட பர்ஸ்ட் லுக்கில் இவ்வளவு விஷயம் இருக்கா! கலக்கும் லோகேஷ்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சென்னை: விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் முதல் போஸ்டர் மற்றும் பெயர் வெளியாகி உள்ளது. படத்திற்கு மாஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தளபதி 64தான் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது.

செம படம்

செம படம்

மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி தன்னுடைய படங்கள் பலவற்றை ஒத்திவைத்துவிட்டு அவர் தளபதி 64 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி செல்லும்

எப்படி செல்லும்

இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க விஜயை மட்டும் சுற்றி சுழலும் கதை என்று கூறுகிறார்கள். அதனால் இந்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயர் வைத்துள்ளனர். விஜய்தான் மாஸ்டர் போல எல்லோரையும் ஆட்டி படைப்பார்.

கேம் ஆடுவார்

கேம் ஆடுவார்

படம் முழுக்க விஜய் ஆடும் கேம்தான் கதை என்று கூறுகிறார்கள். அதனால்தான் போஸ்டரில் விஜய் கையில் வளையம் வைத்து எல்லோரையும் சுற்ற விடுவார் என்று கூறுகிறார்கள். அதாவது இவர் மாஸ்டர் போல எல்லோரையும் ஆட வைத்து வேடிக்கை பார்ப்பார் என்று படக்குழு கூறுகிறது.

செம போஸ்டர்

செம போஸ்டர்

அதேபோல் படத்தின் போஸ்டர் 3டி வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் விஜய், விஜய் சேதுபதி கைதி புகழ் அர்ஜுன் தாஸ் ஆகியோர் இடையே நடக்கும் முக்கோண கதை என்பதை உணர்த்தி உள்ளனர்.

பொறி பறக்கும்

பொறி பறக்கும்

பொதுவாக பொதுவாக லோகேஷ் கனகராஜ் எடுத்த இரண்டு படங்களும் பல்வேறு விஷயங்களை சுற்றி நகரும் கதையாக இருந்தது. உதாரணமாக மாநகரம் படம் 4 பேரின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதையாகும். கைதி படமும் அதேபோல்தான் லாரி ஓட்டுநர், போலீஸ், சிறுமி, போலீஸ் ஸ்டேஷன் என்று பல விஷயங்களை சுற்றி நடக்கும் கதையாகும். அதேபோல் இந்த கதையும் விறுவிறுப்பாக செல்லும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X