சிவகார்த்திகேயனோட ரஃப் நோட்டை பார்க்கணும்.. இது ’தளபதி 64’ ஸ்க்ரிப்ட் ரைட்டரோட ஆசை!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஹீரோ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரத்னகுமார் பாராட்டியுள்ளார்.

ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்திற்கு ஸ்க்ரிப்ட் ஒர்க் செய்து வருகிறார்.

தளபதி 64 படத்தின் அப்டேட்களை அவ்வப்போது இணையத்தில் கொடுத்து வரும் ரத்னகுமார், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ஹீரோ படத்தை பாராட்டியுள்ளார்.

கருத்தூசி

குத்தூசி கேள்விப் பட்டிருப்போம் அது என்ன பாஸ் கருத்தூசி என ஆடை பட இயக்குநர் ரத்னகுமாரிடம் நேரடியாகவே கேட்கலாம். கருத்துக்களை நம் மனதில் ஊசி போல குத்திச் சொல்வது தான் கருத்தூசி என அவரும் ஜாலியாக விளக்கம் தருவார். அந்த அளவுக்கு சோஷியல் மீடியாவில் ரத்னகுமார் ஆக்டிவ். அதே அளவுக்கு தனது வேலையிலும் சின்சியர் தான் பாஸ்.

ரஃப் நோட்

ரஃப் நோட்

ஹீரோ படத்தில் இந்த ரஃப் நோட் முக்கிய பங்காற்றியுள்ளது. மாணவர்களின் கிளாஸ் வொர்க் நோட், ஹோம் ஒர்க் நோட்டை பார்க்கும் பெற்றோர்கள், அவர்களின் ரஃப் நோட்டையும் பாருங்கள். அப்போது தான் அவர்களின் திறமை தெரியும் என ஹீரோ படம் கல்வி குறித்த ஆழமான சிந்தனையை சின்ன ரஃப் நோட்டில் அழகாக அடுக்கிக் காட்டியிருக்கிறது.

ரத்னகுமாரின் ஆசை

ரத்னகுமாரின் ஆசை

ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார், சிவகார்த்திகேயனின் ரஃப் நோட்டை பார்க்க வேண்டும் என்ற ஆசையையும் இந்த ட்வீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். காமெடியனாக டிவி நிகழ்ச்சியில் வந்து சூப்பர் ஹீரோவாக கோலிவுட்டில் உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் ரஃப் நோட்டிலும் பல ரகசியங்கள் கிடைக்கலாம்.

இந்திய நோலன்

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் தீவிர ரசிகரான இயக்குநர் பி.எஸ். மித்ரனை இந்திய கிறிஸ்டோபர் நோலன் என்றே ஹீரோ படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த ரசிகரும் அதே கருத்தை பதிவிட்டுள்ளார்.

தளபதி 64 அப்டேட்

ரத்னகுமார் ஆன்லைனில் வந்து ட்வீட் போட்டால், அடுத்த நொடி தளபதி ரசிகர்கள் வந்து தளபதி 64 அப்டேட்டை கேட்காமல் போனால் தான் ஆச்சர்யம். இந்த தளபதி ரசிகரும் ரத்னகுமார் அடுத்த தளபதி அப்டேட் ஏதாவது கசியவிடுவாரா என்று ஏக்கத்துடன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஸ்க்ரீன்பிளே ஃபாஸ்ட்டா இருக்குமா?

ப்ரோ தளபதி 64 ஸ்க்ரீன்பிளே ஃபாஸ்ட்டா இருக்குமா? என இந்த தளபதி ரசிகர் கேள்வி கேட்டுள்ளார். இதென்ன ப்ரோ கேள்வி, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் என இளைய சிந்தனைகள் இணைந்துள்ளனர். இதுக்கு மேல, விஜய் - விஜய்சேதுபதி காம்போ, நிச்சயம் ஸ்க்ரீன்பிளே தெறியாத்தான் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X