டெல்லி ஓவர்.. ’தளபதி 64’ அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கே தெரியுமா?
Recommended Video
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' ஷூட்டிங் அடுத்த கட்டமாக மும்பையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், கெளரி கிஷன், ரம்யா, செளந்தர்யா, சேத்தன், பிரேம் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'தளபதி 64' படம் உருவாகி வருகிறது.
தீபாவளிக்கு வெளியான பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டில் என்ன?
'தளபதி 64' படத்திற்கு டாக்டர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக, இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் வரும் ஆங்கில புத்தாண்டு அன்று ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ கதையா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்திலும், கல்வித் துறையில் நடக்கும் ஊழல்களும், நீட் தேர்வு குறித்த பிரச்சனைகளும் கையாளப்பட்டுள்ள நிலையில், தளபதி 64 படத்திலும் அதே பிரச்சனை குறித்து படம் உருவாகிறதா என்ற சந்தேகம் கோலிவுட்டில் எழுந்துள்ளது.

அடுத்து எங்கே?
'தளபதி 64' படத்தின் ஷூட்டிங் டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் மாணவரா? அல்லது ஆசிரியரா? என்ற சந்தேகம் லீக்கான புகைப்படங்களால் உருவாகியுள்ளது. வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் பயங்கர ஸ்வாகாக விஜய் ‘தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். டெல்லியில் ஷூட்டிங் முடிய உள்ள நிலையில், அடுத்ததாக மும்பையில் சில காட்சிகளை படக்குழு படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, ஆண்டனி வர்கீஸ்
'தளபதி 64' படத்தில் விஜய்சேதுபதி மற்றும் ஆண்டனி வர்கீஸ் வில்லன்களாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதியின் சில காட்சிகள் சென்னையில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் படமாக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











