தளபதிக்கு நாளைக்கு... டைரக்டருக்கு இன்னைக்கு... சிறப்பான சம்பவம்... குவியும் வாழ்த்துக்கள்

சென்னை : தளபதி 65 படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் நெல்சன் திலீப்குமார்.

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தையும் கோலமாவு கோகிலா படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் தனது 37வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

கோலமாவு கோகிலா படம்

கோலமாவு கோகிலா படம்

நெல்சன் திலீப்குமார் தனது முதல் படமான கோலமாவு கோகிலா படத்திற்காக சிறப்பாக கொண்டாடப்பட்ட இயக்குநர். இந்த படத்தின் சிறப்பான திரைக்கதைக்காக நார்வே தமிழ்ப்பட திருவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளார்.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

கடந்த 2010ல் சிலம்பரசனை வைத்து இவர் ஆரம்பித்த வேட்டை மன்னன் படம் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து இவர் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா சிறப்பான வரவேற்பை பெற்றது.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன். தற்போது தளபதி 65 படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே இன்றைய தினம் நெல்சன் தனது 37வது பிறந்ததினத்தை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தளபதி 65 இயக்கம்

தளபதி 65 இயக்கம்

நெல்சன் திலீப்குமார் குறைந்த காலத்திலேயே தளபதி விஜய்யை இயக்கும் பொறுப்பை பெற்றுள்ளார். மாஸ்டர் படம் சிறப்பான வகையில் ரசிகர்களிடம் ரீச் ஆனது. இந்நிலையில் தளபதி 65 படத்திற்கும் ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு காணப்படுகிறது. அதை நெல்சன் திலீப்குமார் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

இன்று நெல்சன்

இன்று நெல்சன்

நாளைய தினம் தளபதி விஜய்யின் பிறந்ததினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நெல்சன் திலீப்குமாரின் பிறந்ததினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருவது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X