அடேங்கப்பா.. தளபதி 65 ஹீரோயினுக்கு "இவ்வளவா".. அவர் தான் அந்த அதிர்ஷ்டசாலியா!
சென்னை : மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டு இன்றுடன் 50 நாள் ஆகிறது.
தற்போதுள்ள கொரோனா நெருக்கடி காலத்தில் இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதிலும் வாத்தி கம்மிங் பாடல் பெரிய அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது. யூட்யூப்பில் இப்பாடலுக்கு பார்வைகள் கூடிக் கொண்டே செல்கிறது.

தளபதி 65 பக்கம் திரும்பும் பார்வை
இதே எதிர்பார்ப்பு தளபதி 65 மீது ஏற்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க முடிவாகி உள்ளது.

இவ்வளவு சம்பளமா
நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறும் தகவலின்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய சம்பளத்திற்கு பூஜாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ரூ.3.5 கோடியை பூஜாவுக்கு சம்பளமாக நிர்ணயித்துள்ளார்கள் என கூறப்படுகிறது. இதற்கு ஒப்புக் கொண்டு பூஜா ஹெக்டேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

9 ஆண்டு காத்திருப்பிற்கு பலன்
பூஜா ஹெக்டே, 2012 ம் ஆண்டு மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தார். இது தான் அவரின் முதல் படம். அதற்கு பின் தெலுங்கிற்கு சென்ற பூஜா, 9 ஆண்டுகள் கழித்து தற்போது தான் மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பி உள்ளார்.

விரைவில் அறிவிப்பு
பூஜா ஹெக்டேவை, தளபதி 65 படக்குழு முடிவு செய்து விட்டாலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில் ஹீரோயின் உள்ளிட்ட அனைத்து கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











