சென்னையில் தளபதி 65...ரெடியாகிறது பிரம்மாண்ட செட்

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் விஜய் தற்போது நடத்தி வருகிறார். தளபதி 65 படக்குழுவினர் சமீபத்தில் தான் ஜார்ஜியாவில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பியது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

சென்னையை தொடர்ந்து ஐதராபாத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த தளபதி 65 படக்குழு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பரவல் காலம் என்பதால் இது உறுதி செய்யப்படாமல் உள்ளது. தளபதி 65 படத்தின் வேலைகள் இன்னும் பாதி அளவு கூட முடிவடையாத நிலையில் அடுத்தடுத்த 3 - 4 படங்களில் நடிக்க கதை கேட்டு ஓகே சொல்லி வருகிறார் விஜய். இருந்தாலும் எந்த நேரமும் லாக்டவுன் போடப்படலாம் என்ற சூழ்நிலை உள்ளதால் தளபதி 65 படத்தை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் பிரம்மாண்ட செட்

சென்னையில் பிரம்மாண்ட செட்

லேட்டஸ்ட் தகவலின் படி, தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் ஷாப்பிங் மால் போன்ற பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். தற்போது கொரோனா பரவல் காரணமாக ஷாப்பிங் மால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஷாப்பிங் மால் போன்று செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரகசியம் காக்கும் படக்குழு

ரகசியம் காக்கும் படக்குழு

இந்த ஷாப்பிங் மால் செட்டில் முக்கிய காட்சிகள் பலவும் படமாக்கப்பட உள்ளதாம். அதே சமயம் எந்த பகுதியில் இந்த செட் அமைக்கப்பட்டு வருகிறது என்ற தகவலை வெளியிட படக்குழு மறுத்துள்ளது. காரணம், விஜய் ரசிகர்கள் கூட்டம் கூடுவார்கள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் பிரச்னை ஏற்படும் என படக்குழு கருதுவதே இதற்கு காரணமாம்.

வித்தியாசமான கெட்டப்பில் விஜய்

வித்தியாசமான கெட்டப்பில் விஜய்

இதுவரை கண்டிறாத வித்தியாசமான தோற்றத்தில் தளபதி 65 படத்தில் விஜய் நடிக்கிறாராம். இந்த படம் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கலவையாக இருக்கும் என படக்குழு கூறுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு பூஜா, தமிழ் படங்களில் நடிக்கிறார்.

Recommended Video

Thalapathy Fans அசத்தும் உதவி | Free Oxygen Cylinder, Mask | Thalapathy Vijay
பூஜா ஹெக்டே பங்கேற்பாரா

பூஜா ஹெக்டே பங்கேற்பாரா

இந்த படத்தில் யோகிபாபு, அபர்னா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கிடையில் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டேவிற்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அவர் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்ட பிறகே பூஜா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X