Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பித்துள்ளது.
ஆனால், வானிலை மாற்றம் காரணமாக திடீரென படப்பிடிப்புக்கு பெரிய சிக்கல் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !
இதனால், தளபதி 65 படத்தின் ஷெட்யூல் திட்டமிட்டப்படி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.
சென்னையில் பூஜை
சென்னை பெருங்களத்தூரில் உள்ள சன் ஸ்டூடியோவில் சமீபத்தில் தளபதி 65 படத்தின் பூஜை போடப்பட்டது. நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன், அபர்ணா தாஸ், கவின், விடிவி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜியாவில் ஷூட்டிங்
சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டு தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தளபதி விஜய் அடுத்த நாளே ஜார்ஜியாவில் ஆரம்பமாகும் தளபதி 65 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் விஜய் ஓப்பன் கிரவுண்டில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக அறிவித்தது.
திடீர் சிக்கல்
இந்நிலையில், தற்போது ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்கு திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தளபதி 65 படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் திடீரென கோடை மழை பெய்ய தொடங்கி இருப்பதன் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
சொதப்பிய பிளான்
வெறும் 15 நாட்களில் ஜார்ஜியாவில் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு சென்னை திரும்பலாம் என நினைத்த படக்குழுவின் திட்டம் தற்போது செமையாக சொதப்பி உள்ளது. இதன் காரணமாக மேலும், 2 அல்லது மூன்று நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நீளும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
அதுவேற இருக்கே
மழை கொடுமை மட்டுமின்றி உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து திட்டமிட்டப்படி தளபதி 65 படத்தின் ஷூட்டிங் முடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகுமா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எல்லாம் நல்ல விதமாகவே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.