தளபதி 65 ல் இருங்கீங்களா அண்ணா...ரசிகரிடம் உண்மையை சொன்ன பிரபல நடிகர்
சென்னை : மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 65. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நெல்சன் திலீப்குமாருடன் முதல் முறையாக விஜய் கூட்டணி அமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு தளபதி 65 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே துவங்கப்பட்ட தளபதி 65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு வந்தது. அதற்குள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது இந்த படத்தில் தானும் நடிக்க உள்ளதை யோகிபாபு உறுதி செய்துள்ளார். சர்க்கார் படத்திற்கு பிறகு தளபதி 65 படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளார் யோகிபாபு. இவர்கள் இருவரின் காமெடி காம்போ சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த படத்திலும் யோகிபாபுவை நடிக்க வைக்க நெல்சன் முடிவு செய்துள்ளார்.
ட்விட்டரில் ரசிகர்களுடன் யோகிபாபு கஙந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், அண்ணா சொல்லுங்க அண்ணா தளபதி 65 ல இருக்கீங்களா ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா என மிகவும் கெஞ்சிக் கேட்டதால். ஆமாம் இருக்கிறேன்ப்பா என ஒரே வார்த்தையில் பதிலளித்து, தளபதி 65 ல் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார் யோகிபாபு.
அதிக சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படமாக தளபதி 65 எடுக்கப்பட உள்ளதாம். பல மொழிகளிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் இதனை பான் இந்தியா படமாக எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











