கையில் பேப்பர்.. கூல் முகம்.. ஜில்லுன்னு ஒரு போட்டோ.. வைரலாகும் "தளபதி 65"!
சென்னை : மாஸ்டர் படம் ரிலீஸ் உறுதியான உடன், 2020 ம் ஆண்டு டிசம்பரில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அப்போதே அதிகரிக்க துவங்கியது.
விஜய், முதல் முறையாக டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க போவதாகவும், அந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து இந்த படம் பற்றி அடுத்தடுத்த அப்டேட்களம் வெளியிடப்பட்டன.

பிரம்மாண்ட பூஜை
சமீபத்தில் இந்த புதிய படத்தின் பூஜை, மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் விஜய் கலந்து கொண்ட ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைத் தொடர்ந்து படத்தின் பூஜை நிகழ்ச்சியில் அனைத்து ஃபோட்டோக்களும், அதைத் தொடர்ந்து வீடியோவும் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

சென்னையில் முதல்கட்ட சூட்டிங்
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட உள்ளதாகவும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஜார்ஜியாவில் துவங்கிய சூட்டிங்
தளபதி 65 படத்தின் சூட்டிங் ஜார்ஜியாவில் துவங்கி உள்ளதாக 2 நாட்களுக்கு முன் ஃபோட்டோவுடன் தகவல் வெளியிடப்பட்டது. இதனால் இந்த படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என கூறப்பட்டது. இதை டைரக்டர் நெல்சனும் முன்பே கூறி இருந்தார்.

வைரலாகும் விஜய்யின் ஃபோட்டோ
இந்நிலையில் தற்போது துவங்கி இருக்கும் தளபதி 65 சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் பங்கேற்ற லேட்டஸ்ட் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ரொம்பவும் அமைதியான முகத்துடன், கையில் ஒரு பேப்பரை வைத்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற விஜய்யின் இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











