தளபதி 65.. "வேற மாறி வேற மாறி".. பீஸ்ட்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள் !
சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
படத்திற்கு பீஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தீவிரமான விஜய்யை பார்க்க முடிகிறது.
நாளைய தினம் விஜய் தனது 47வது பிறந்ததினத்தை கொண்டாடவுள்ளதையடுத்து தளபதி 65 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தளபதி 65
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு மாஸாக தயாராகி வருகிறது தளபதி 65 படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஜியார்ஜியாவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஷெட்யூல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாள்
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நாளைய தினம் நடிகர் விஜய் தனது 47வது பிறந்ததினத்தை கொண்டாட உள்ளார். இதையடுத்து தளபதி 65 படத்தின் தலைப்பு அல்லது பர்ஸ்ட் லுக்கை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் இரண்டையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நாளைய தினம் நடிகர் விஜய் தனது 47வது பிறந்ததினத்தை கொண்டாட உள்ளார். இதையடுத்து தளபதி 65 படத்தின் தலைப்பு அல்லது பர்ஸ்ட் லுக்கை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் இரண்டையும் தற்போது வெளியிட்டுள்ளது.

துப்பாக்கியுடன் விஜய்
படத்திற்கு பீஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக்கில் கையில் நீண்ட துப்பாக்கியுடன் தளபதி தீவிரமாக எதையோ யோசித்தபடி உள்ளார்.இந்த போஸ் அவரது ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. மிருகம் என்ற அர்த்தம் கொண்ட இந்த தலைப்பு இதுவரை இல்லாத வகையில் புது அனுபவத்தை அவரது ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

போஸ்டரை பகிர்ந்த விஜய்
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்து ட்விட்டரில் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை பகிர்ந்துள்ளார். இதேபோல நடிகை நயன்தாரா, டைரக்டர்கள் லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்சுக்கு பாராட்டு
படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய விருப்பத்திற்குரிய தளபதியின் பர்ஸ்ட் லுக் என்றும் சன் பிக்சர்சுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல சஞ்சய் விஜய், அர்ஜூன் தாஸ், மஞ்சிமா மோகன் என ஏராளமானவர்கள் தொடர்ந்து இந்த போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











