ஆரம்பமானது தளபதி 65.. சன் டிவி ஸ்டூடியோவில் பட பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம் #Thalapathy65
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை இன்று சன் டிவி ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கிரே கலர் சட்டையில் பூஜையில் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 65 பூஜை
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை இன்று சன் டிவி ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது. சர்க்கார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் இந்த படத்தில் நடிக்க உள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.

தெறிக்கும் டிரெண்டிங்
தளபதி 65 படத்தின் பூஜை போடப்பட்ட செய்தி காட்டுத் தீ போல சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், தளபதி ரசிகர்கள் #Thalapathy65 ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் படங்களுக்கு இதற்கு முன் போடப்பட்ட பூஜை போட்டோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் வெயிட்டிங்
சன் பிக்சர்ஸ் விரைவில் படத்தின் பட பூஜை போட்டோக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ள நிலையில், தளபதி தரிசனத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏதாவது போட்டோக்கள் முன்னதாக லீக் ஆகாதா என்றும் சோஷியல் மீடியாவில் வட்டமிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இரண்டு நாள் படப்பிடிப்பு
படத்தின் பூஜையுடன் சேர்த்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் சென்னையிலேயே நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்க்கார் படத்தின் சில காட்சிகள் சன் டிவி அலுவலகத்தில் படமாக்கப்பட்டு இருந்த நிலையில், தளபதி 65 காட்சிகளும் அங்கேயே படமாக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்யாவில் படப்பிடிப்பு
இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பின்னர் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தல் முடிந்த உடன் ரஷ்யாவுக்கு படக்குழு படப்பிடிப்புக்காக செல்ல தயாராகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ரஷ்யாவில் படப்பிடிப்புக்கான லொகேஷன் தேடுதல் வேட்டையில் இருப்பதாக இயக்குநர் நெல்சன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.


Click it and Unblock the Notifications











