தளபதி 65.. ஜார்ஜியாவில் ஓரிரு நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்கிறது படக்குழு.. வைரல் தகவல்!
சென்னை: ஜார்ஜியாவில் நடைபெறும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு பெற்றுவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.
புதிய படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும் சில படங்களின் படப்பிடிப்பு வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

ஜார்ஜியா
அந்த வகையில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் அண்மையில் தொடங்கியது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஜார்ஜியா ஷூட்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் ஜார்ஜியா புறப்பட்டனர். இந்நிலையில் ஜார்ஜியாவில் நடைபெறும் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு பெற்றுவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மே முதல் வாரத்தில்
அடுத்த சில நாட்களில் சென்னை திரும்பும் படக்குழு, பாடல்களுக்கான ரிகர்சலை தொடங்கவுள்ளனர். பாடல்களுக்கான படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டப்படி மே முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.

விரைவில் பட்டியல்
தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவு இந்த படத்தில் இணைந்துள்ளார். தளபதி 65 படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











