தளபதி 65… இதுதான் டைட்டிலா?... சோஷியல் மீடியாவில் லீக்கான தகவல் !

சென்னை : தளபதி65 படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூகவலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

விஜய்யின் படத்தலைப்பு குறித்து படக்குழுவினர் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இருப்பினும் விஜய் ரசிகர்கள் இந்த தலைப்பை சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

47வது பிறந்தநாள்

47வது பிறந்தநாள்

தளபதி விஜய் தனது 47வது பிறந்தநாளை ஜூன்22 ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவரின் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் கடந்த வாரம் முதலே தயாராகிய விட்டார்கள். விஜய்யின் ரசிகர்கள் காமன் டிபிக்களை வெளியிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர்.

2ம் கட்ட படப்பிடிப்பு

2ம் கட்ட படப்பிடிப்பு

தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தளபதியில் பிறந்த நாள் அன்று தளபதி 65 படத்தின் தலைப்பு அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏன் என்றால் வழக்கமாக தளபதியின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ஏதாவது ஒன்றை வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தளபதி65 குறித்த அப்டேட் வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Recommended Video

Ronaldo Vs Thalapathy ரெண்டு பேருக்கும் பெரிய ஒற்றுமை | COCO COLA
இதுதான் டைட்டிலா?

இதுதான் டைட்டிலா?

இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளத்தில தளபதி 65 டைட்டில் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தளபதி65 திரைப்படத்திற்கு டார்கெட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. விஜய் ரசிகர்கள் இந்த தலைப்பை சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அப்டேட் வருமா?

தளபதி 65 குறித்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தளபதி 66 திரைப்படம் குறித்த தகவல்களும் ஒரு பக்கம் வைரலாகி வருகிறது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி பைட்டிபல்லி தளபதி66 படத்தை இயக்க உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பும் தளபதியின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ தளபதியின் பிறந்த நாளைக்கு ரசிகர்களுக்கு சூப்பரான டிரீட் நிச்சயம் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X