’தளபதி 65’ இயக்குநர் மகிழ் திருமேனி இல்லை?

Recommended Video

A news is spreading that 'Thadam' director Magizh Thirumeni will be directing Vijay's 65th movie.

சென்னை: விஜய்யின் 'தளபதி 65' படத்தை மகிழ் திருமேனி இயக்கப்போவதாக வந்த செய்திகள் வெறும் வதந்தி தான் என்ற தகவல் கிடைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், இன்னமும் தனது அடுத்த படத்திற்கான கதையை தேர்வு செய்யவில்லை என்றும் தெரிகிறது.

அநேகமாக வெற்றிமாறன் அல்லது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தான் 'தளபதி 65' உருவாகும் என்றும் நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கதை கேட்டாரா?

கதை கேட்டாரா?

இந்த ஆண்டு வெளியாகி பலரது பாராட்டுக்களை அள்ளிய தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேனியிடம் நடிகர் விஜய், 8 மாதங்களுக்கு முன்பு கதை கேட்டுள்ளாராம். ஆனால், அந்த கதை ‘தளபதி 64' படத்திற்காக கேட்கப்பட்டதாகவும், இறுதியில், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கதையை விஜய் ஃபைனல் செய்ததகாவும் தகவல் கிடைத்துள்ளது.

வதந்தி

வதந்தி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64' படத்திற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர் விஜய், சமீபத்தில் மகிழ் திருமேனியிடம் கதை கேட்டு ஓகே சொன்னதாக வந்த தகவல்கள் வதந்தி தான் என தெரியவந்துள்ளது. தளபதியின் 65வது படத்தை நிச்சயம் மகிழ் திருமேனி பண்ண வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

நெக்ஸ்ட்

நெக்ஸ்ட்

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மகிழ் திருமேனி நடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள மகிழ் திருமேனி அடுத்ததாக விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிக்கவுள்ளார். 2020ம் ஆண்டில் உதயநிதி ஸ்டாலினை வைத்து தனது அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

வெற்றிமாறனா? முருகதாஸா?

வெற்றிமாறனா? முருகதாஸா?

மகிழ் திருமேனி 'தளபதி 65' படத்தை இயக்கவில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளாரா அல்லது மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு கதை சொல்லியிருக்கிறேன். விரைவில் இருவரோடும் படம் பண்ணுவேன் எனக் கூறியுள்ளார்.

அசுரன் படத்தின் வெற்றியால், வெற்றிமாறனுடன் விஜய் இணைய அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X