விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சுழி போடப்படுமா.. இத்தனை கோடி பட்ஜெட்டில் உருவாகிறதா தளபதி 65?
சென்னை: தளபதி 65 படம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படம் இன்னும் திரைக்கு வராத கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.
அதே போல தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்னும் எவ்ளோ நாள் ஆகும்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை பார்க்காமலே போகிறேன் என ரசிகர் பாலா உருக்கத்துடன் உயிர் விட்டதை தளபதி ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால், தொடர்ந்து தியேட்டர்கள் திறப்பு தாமதமாகி வருவதால், தீபாவளிக்காவது படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

பாதிக்கும் பிசினஸ்
பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் தளபதி விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்கள், சரியான நேரத்தில் வெளியாகவில்லை என்றால், தயாரிப்பாளர் தரப்புக்கு அது மிகப்பெரிய இழப்பை உருவாக்கும் அபாயமும் உள்ளது. தியேட்டர்கள் திறந்தாலும், 25 சதவீத இடம் மட்டுமே நிரப்பப்படும் என்ற கண்டிஷன் பிறப்பிக்கப்பட்டால் அதுவும் வசூலுக்கு வேட்டு வைக்கும்.

தளபதி 65
இந்நிலையில், தளபதி 65 படம் குறித்த அப்டேட்டுகளும் தகவலும் வெளியாகி வைரலாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ்ட் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளது உறுதியாகி விட்டது. முழு ஸ்க்ரிப்டும் ரெடியான நிலையில், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு
சன் பிக்சர்ஸ் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ், தளபதி விஜய் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாக தற்போது விஜய் ரசிகர்கள் #Thalapathy65 என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும், வரும் விநாயகர் சதுர்த்திக்கு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு தளபதி 65க்கு பிள்ளையார் சுழி போடப்படும் என்றும் கூறுகின்றனர்.

எத்தனை கோடி
சர்கார் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணிக்கு முதலீடு செய்ய உள்ள சன் பிக்சர்ஸ் இந்த படத்தை 130 கோடிக்கு தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் லீக்காகி உள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்றும் சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video

ரஜினி படம்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங்கும் அப்படியே பாதியில் நிற்கிறது. இந்நிலையில், அடுத்த பெரிய படத்தை ஆரம்பிக்க உடனடியாக சன் பிக்சர்ஸ் சம்மதம் தெரிவிக்குமா? இல்லை கால தாமதம் செய்யுமா? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











