அச்சச்சோ.. இன்னும் ஸ்க்ரிப்ட்டே முடிக்கலையாமே.. தளபதி 65 குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

சென்னை: விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்தின் ஸ்க்ரிப்ட் இன்னும் முடிக்கப்படவில்லை என தகவல் பரவி வருகிறது.

Recommended Video

SURIYA ரசிகர்களுக்கு ஒரு Bad New | SK மகளா இது? | Cinema RoundUp

விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதுதொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கான லொக்கேஷனை தேர்வு செய்ய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அண்மையில் ரஷ்யா சென்றார்.

ஸ்க்ரிப்ட் ரெடியாகல

ஸ்க்ரிப்ட் ரெடியாகல

இந்நிலையில் படத்தின் முழு ஸ்க்ரிப்ட்டும் இன்னமும் தயாராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நெல்சன் திலீப்குமார் இயக்கும் டாக்டர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

இதன் படப்பிடிப்பு முடிந்து வரும் 26 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சட்டசபை தேர்தல் நடைபெறும் காரணத்தினால் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது படக்குழு.

ஒரே நேரத்தில் ஆரம்பித்தார்

ஒரே நேரத்தில் ஆரம்பித்தார்

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், டாக்டர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போதே, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் மற்றும் தளபதி 65 படத்தின் ஸ்க்ரிப்ட் வொர்க்குகளை ஆரம்பித்து விட்டார் என்றார்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்

இதன்மூலம் தளபதி 65 படத்தின் ஸ்க்ரிட் இன்னும் முடியவில்லை என தெரிகிறது. ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிந்தப்பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. நடிகர் விஜய் முன்னதாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்க இருந்ததாக தகவல் வெளியானது.

கைவிட்ட முருகதாஸ்

கைவிட்ட முருகதாஸ்

மேலும் அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து படத்தின் கதையில் மாற்றம் செய்ய சொன்னதால் அதனை ஏற்க மறுத்த ஏஆர் முருகதாஸ் அந்த படத்தை இயக்கும் முயற்சியை கைவிட்டார்.

ஏப்ரல் மாதம் தொடங்கும்

ஏப்ரல் மாதம் தொடங்கும்

இதனை தொடர்ந்தே நெல்சன் திலீப்குமாருக்கு தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தெரிகிறது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X