“தளபதி65“ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாமதம்... ரசிகர்கள் கவலை !

சென்னை : தளபதி65 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாமதமாகும் சூழல் உருவாகி உள்ளது.

கொரோனாவின் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் 2வது கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

தளபதி65 படத்திற்கு பூஜை போடப்பட்டு, சென்ற மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியிவில் தொடங்கியது. இதில் சண்டைக்காட்சிகள் பாடல் காட்சிகள் உள்பட பல முக்கியமான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

பிரம்மாண்ட செட்

பிரம்மாண்ட செட்

தற்போது 'தளபதி65' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் மே மாதம் தொடங்க திட்டமிட்டனர். ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டுள்ளதால், அவற்றில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக ஷாப்பிங் மால் போன்ற பிரம்மாண்டமான செட் அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

பாடலுக்கு ஒத்திகை

பாடலுக்கு ஒத்திகை

புட்ட பொம்மா பாடல் மூலம் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் ஜானி ஒரு பாடலுக்காக குழுவுடன் தற்போது ஒத்திகைப்பார்த்து வருகிறார். மேலும் தயாரிப்பாளர் தளபதி 65 படத்தை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

தாமதமாகும்

தாமதமாகும்

தற்போது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மே மாதம் தொடங்க வேண்டிய 2வது கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உறுதியாகாத இந்த தகவலால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

முக்கிய வேடத்தில்

முக்கிய வேடத்தில்

பூஜா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் மீண்டுள்ளார். இதனால் அவர், அடுத்த அட்டவணையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார்.

More from Filmibeat

Read more about: thalapathy 65
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X