தளபதி 65க்காக பிரமாண்டமாக தயாரான ஷாப்பிங் மால் செட்.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை.. அப்படியே ஆஃப்!

சென்னை: தளபதி 65 படத்திற்காக சென்னையில் பிரமாண்டமாய் தயாரான ஷாப்பிங் மால் செட் விஜய் சொன்ன ஒரே வார்த்தையால் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபார்ணா தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் கடந்த மாதம் தொடங்கியது. கடந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

ஜார்ஜியாவில் முதல் ஷெட்யூல்

ஜார்ஜியாவில் முதல் ஷெட்யூல்

கடந்த 25ஆம் தேதி ஜார்ஜியாவில் இருந்து படக்குழு சென்னை திரும்பியது. படக்குழு ஊர்திரும்பிய கையோடு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஷாப்பிங் மால் செட்

ஷாப்பிங் மால் செட்

இதனால் மே முதல் வாரத்தில் சென்னையில் நடைபெறுவதாக கூறப்பட்ட இரண்டாவது கட்ட படப்பபிடிப்பு தள்ளி போகும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் தளபதி 65 படத்திற்காக சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு வந்தது.

விஜய் சொன்ன வார்த்தை

விஜய் சொன்ன வார்த்தை

தற்போது கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் உள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஷாப்பிங் மால் செட் போடும் பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார் விஜய்.

செட் போடும் பணி நிறுத்தம்

செட் போடும் பணி நிறுத்தம்

விஜய் சொன்னதை கேட்ட படக்குழு செட் போடும் பணியை உடனடியாக நிறுத்தியுள்ளது. இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆர்வமாக உள்ளது.

Recommended Video

Thalapathy Vijay வீட்டை வாங்கிய Vijay Antony? | S.A.chandrasekhar,Thalapathy Vijay
பெரும் பட்ஜெட்டில்

பெரும் பட்ஜெட்டில்

கொரோனா பெருந்தோற்றால் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் ஊரடங்கு காரணமாக தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் தளபதி 65 படம் தயாராகிறது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X