வேற மாறி வெறித்தனம்.. ஜார்ஜியாவில் ஆரம்பமானது தளபதி 65 ஷூட்டிங்.. மெர்சல் பண்ணும் விஜய்!
சென்னை: தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பமாகி உள்ளது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி 65
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் தளபதி 65 படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக படக்குழு ஜார்ஜியாவுக்கு சென்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கை செலுத்திய மறுநாளே நடிகர் விஜய் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார்.

வேற மாறி
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த நெல்சன் திலீப்குமார், சிம்புவின் வேட்டை மன்னன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் டிராப் ஆன நிலையில், நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நெல்சன், தளபதி 65 படத்தை வேற மாறி தயாரிக்க வெளிநாடு சென்றுள்ளார்.

பட பூஜை
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் எளிமையான முறையில் தளபதி 65 படத்தின் பூஜை போடப்பட்டது. பட பூஜையில் கிரே கலர் சிலுக்கு சட்டை அணிந்து கொண்டு புசு புசு கன்னங்களுடன் தளபதி விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றது.

பூஜா ஹெக்டே
டோலிவுட், பாலிவுட் என ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் நடந்த பட பூஜையில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஜார்ஜியாவில் நடக்கும் படப்பிடிப்பிலும் பூஜா ஹெக்டே பங்கேற்றுள்ளாரா? இல்லையா? என்பது இன்னமும் கன்ஃபார்ம் ஆகவில்லை.

மலையாள நடிகை
பூஜா ஹெக்டேவை தொடர்ந்து தளபதி 65 படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸும் இணைந்துள்ளார். மே மாதத்திற்கு மேல் இந்தியாவில் நடக்கும் படப்பிடிப்பில் தான் அவர் கலந்து கொள்வார் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு கான் ஏஜெண்ட்டாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜார்ஜியாவில் ஆரம்பம்
சென்னை பெருங்களத்தூரில் உள்ள சன் ஸ்டூடியோவில் பட பூஜை நடந்து முடிந்த நிலையில், இரண்டு நாட்கள் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது ஜார்ஜியா நாட்டில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளதாக பிரத்யேக போட்டோவை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் அதிரடி அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
Recommended Video

அப்டேட்டுக்கு பஞ்சமில்லை
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படம் உருவாகி வரும் நிலையில், ரசிகர்கள் அப்டேட்டுக்காக ஏங்கவே தேவை இல்லை. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத் சென்றுள்ளார் என்கிற அறிவிப்பை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்த சன் பிக்சர்ஸ், சூர்யாவின் 40வது குறித்த அட்டகாசமான போஸ்டரை இன்று வெளியிட்டு வைரலாக்கியது. இந்நிலையில், தற்போது தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களையும் ஹேப்பி ஆக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











