இன்னும் சில தினங்களில் தளபதி 65 சூட்டிங் ஆரம்பம்... தகவல்கள் வெளியாகியிருக்கு
சென்னை : தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக விஜய் வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவருடைய ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் தளபதி 65 படத்தின் தலைப்பு அல்லது ட்ரெயிலர் போன்றவற்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் தளபதி 66 படத்தின் அப்டேட்டிற்காகவும் காத்திருக்கின்றனர்.

தளபதி 65 குறித்த அறிவிப்பு
கடந்த ஆண்டில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சன் பிக்சர்ஸ் சார்பில் அவரது தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியானது. மேலும் அவர் நெல்சன் திலீப்குமாருடன் முதல் முறையாக இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
அந்த நேரத்தில் விஜய் பிறந்தநாளின் ட்ரீட்டாக இதை கொண்டாடினார்கள் ரசிகர்கள். தற்போது இந்த பிறந்தநாளில் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் என்னமாதிரியான ட்ரீட்டை தங்களுக்கு தருவார்கள் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நிறுத்தப்பட்ட சூட்டிங்
இந்த படத்தின் சூட்டிங் முதல் கட்டமாக ஜியார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இங்கு இரண்டாவது கட்ட சூட்டிங்கிற்கான செட்கள் போடப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அதை நிறுத்தி வைக்க நடிகர் விஜய் கேட்டுக் கொண்டார். நிலைமை ஓரளவிற்கு நார்மலான உடன் சூட்டிங்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

பாடல் காட்சி படப்பிடிப்பு
இதையடுத்து சூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் சூட்டிங் துவங்கவுள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பங்குபெறும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு பிரபல ஸ்டூடியோவில் எடுக்கப்பட உள்ளதாகவும் இதற்கான செட்கள் தற்போது போடப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











