பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா.. தாமதமாகுமா தளபதி 65? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் விஜய்யின் 65 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் முடிந்துள்ள நிலையில் படக்குழு நேற்று ஜார்ஜியாவில் இருந்து திரும்பியது.

ஹீரோயினுக்கு கொரோனா

ஹீரோயினுக்கு கொரோனா

இதனை தொடர்ந்து மே முதல் வாரத்தில் பாடல்களை காட்சியாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்கான ரிகர்சல் பணிகள் இந்த வாரத்தில் இருக்கும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஷூட்

சென்னையில் ஷூட்

இதனால் திட்டமிட்டப்படி பாடல் காட்சிகளை படமாக்குவது தாமதமாகும் என தெரிகிறது. மே 3ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து பாடல் காட்சிகள் ஷூட் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே சந்தேகம்

ஏற்கனவே சந்தேகம்

தமிழகத்தில் கொரோன வைரஸின் இரண்டாவது அலை படுதீவிரமாக உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்படுமா என்பது ஏற்கனவே சந்தேகமாக இருந்தது.

தள்ளி வைக்கப்படும்

தள்ளி வைக்கப்படும்

இந்நிலையில் படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹோம் குவாரண்டைனில் உள்ளார். அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனாலும் கூட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X