சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி 65? ஃபேக் ஐடி ட்வீட்டால் காண்டான விஜய் ரசிகர்கள்.. செம்ம திட்டு!

சென்னை: தளபதி 65 படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக வந்த ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் உண்மையென்று முதலில் நம்பினர்.

ஆனால், பின்னர் அது ஃபேக் ஐடி ட்வீட் என தெரிந்தவுடன் கடுப்பில் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கி வருகிறார்.

சிம்பாலிக் ட்வீட்

சுதா கொங்கரா ட்வீட் போடுவது போலவே வெறும் T65 என பதிவிட்டு சுதா கொங்கரா என்ற பெயரில் வெளியான ட்வீட், தளபதி ரசிகர்களை ஒரு கணம் உற்சாகப்படுத்தியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக எந்த இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஃபேக் ஐடி

அந்த ட்வீட்டுக்கு கீழே விஜய் ரசிகர்கள் பலரும் குவிந்து வாவ்.. என்றும் சூப்பர் என்றும் மாஸ் என்றும் கமெண்ட்டுகள் போட கிளம்பினர். உடனடியாக அது ஃபேக் ஐடி என தெரிந்து கொண்ட தளபதி ரசிகர்கள், டேய் நீங்களா ஏன் டா ஃபேக் ஐடி யூஸ் பண்ணி எங்க ஆசையில மண் வாரி போடுறீங்க என செம்ம காண்டில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

யார்ரா நீங்களா

டேய் யாரா நீங்களா இப்படி ஃபேக் ஐடி யூஸ் பண்ணி அப்டேட் போட்டு, எங்களை ஏன் டா கடுப்பேத்துறீங்க என இந்த ரசிகர், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி பேசும் காட்சியை எடுத்து போட்டு கமெண்ட் செய்துள்ளார். இவரை போல இன்னும் பல ரசிகர்களும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நம்பிட்டேன் டா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இம்மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், தளபதி 65 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் குறித்த வதந்திகள் தினமும் வெளியாகி வருகிறது. இதனால், இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் நம்பி ஏமாந்துள்ளனர்.

அது தான பார்த்தேன்

அது தான பார்த்தேன் என்னடா இன்னும் ஃபேக் ஐடி இந்த பேருல வரலயேன்னு பார்த்தேன்.. நடத்துங்கடா என இந்த தளபதி ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா பெயரில் வெளியாகி உள்ள இந்த ட்வீட்டுக்கு கீழே பலரும் வாவ் மேம், செம்ம, வெறித்தனம் என்ற ட்வீட்டுகளையும் ஏமாந்து போட்டு வருகின்றனர்.

வேற லெவல்

மேடம், நீங்களா பண்றீங்க தளபதி 65, வேற லெவல்ல இருக்க போகுது.. ஆல் தி பெஸ்ட் மேடம் என இந்த ஏமாந்த ரசிகரும் கமெண்ட் செய்துள்ளார். இவரை போல பல அப்பாவி பிள்ளைகள் சமூக வலைதளத்தில் திரிவதால் தான் இது போன்ற ஃபேக் ஐடி கில்லாடிகளும், தங்களது பொழப்பை ஓட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

ஏன் நம்புறாங்க?

ஏன் நம்புறாங்க?

கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியானது. அதே சமயத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கை கோர்த்தார். தற்போது, சூரரைப் போற்று படம், மாஸ்டர் படத்துக்கு போட்டியாக வெளியாக உள்ளது. இதனால், அடுத்த படத்தில் சுதா கொங்கராவுடன் விஜய் கைகோர்த்து விட்டாரா என்ற ஆசையில் தான் ரசிகர்கள் நம்பி ஏமாறுகின்றனர்.

தளபதி 65?

தளபதி 65?

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர்கள் குறித்து நாள் தோறும் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. பாண்டிராஜ், அட்லீ, கார்த்திக் தங்கவேலு, ஏ.ஆர். முருகதாஸ், ஷங்கர், பேரரசு மற்றும் சுதா கொங்கரா என பல பெயர்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி விஜய் அறிவிப்பார் அது வரை வெயிட்டிங் பண்ணுங்க ரசிகர்களே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X