டிரெண்டாகும் தளபதி 65.. 4வது முறையாக இணையும் கூட்டணி.. இதுதான் டைட்டிலா?

சென்னை: தளபதி 65 படம் குறித்த வதந்திகள் உச்சம் தொட்டுள்ள நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது.

கொரோனா அச்சம் காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்ற கணிப்பும் எழுந்துள்ளது.

தளபதி 65

தளபதி 65

இந்நிலையில், தளபதி ரசிகர்கள் #Thalapathy65 என்ற ஹாஷ்டேக்கை வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் ட்வீட்டுக்கு மேல் குவிந்து, சென்னை டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தான் தளபதி 65 படத்தை இயக்குகிறார் என்ற தகவல் கசிந்தவுடன் இந்த டிரெண்டிங் உருவாகி இருக்கிறது.

4வது முறை

4வது முறை

2012ம் ஆண்டு நடிகர் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் துப்பாக்கி படத்தை இயக்கி அதனை பிளாக்பஸ்டர் வெற்றி பெற செய்தார் ஏ.ஆர். முருகதாஸ். தொடர்ந்து, கத்தி, சர்கார் என அடுத்தடுத்த சரவெடிகளை தளபதி விஜய்க்கு கொடுத்துள்ளார். தளபதி 65 படத்தின் மூலம் 4வது முறையாக இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கி 2

துப்பாக்கி 2

பிகில் பட இசை வெளியீட்டு விழாவை பார்த்துவிட்டு, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், துப்பாக்கி 2 பண்ண வெயிட்டிங் என ட்வீட் செய்திருந்தார். ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணி உறுதியானால், நிச்சயம் துப்பாக்கி 2 படத்தைத் தான் முருகதாஸ் இயக்குவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

இதுதான் டைட்டிலா?

அப்படி துப்பாக்கி 2 படத்தை இயக்கும் பட்சத்தில், அந்த படத்திற்கான டைட்டில் இதுதான் என போஸ்டர் டிசைன்களுடன் ஒரு அட்டகாசமான டைட்டிலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சோல்ஜர் என்ற டைட்டில் துப்பாக்கி 2 படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கப் போகிறது என ரொம்ப நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார், தர்பார் படங்களை தொடர்ந்து துப்பாக்கி 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

இசையமைப்பாளர் யார்?

இசையமைப்பாளர் யார்?

மேலும், துப்பாக்கி 2 படம் உருவானால், இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் தான் பொருத்தமான தேர்வு என்றும், துப்பாக்கி படத்திற்கு இசையமைத்தது போல, சூப்பர் மியூசிக்கை அவரால் தான் தர முடியும், விஜய் - முருகதாஸ் - ஹாரிஷ் ஜெயராஜ் இந்த கூட்டணியில் எந்த மாற்றமும் வரக் கூடாது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X