பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 நடிக்க போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த படம் பற்றி தினமும் ஏதாவது தகவல் வந்த வண்ணம் உள்ளது.
இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. சமீபத்தில் சன் ஸ்டூடியோசில் விஜய்யின் போட்டோசூட் நடத்தப்பட்டுள்ளது. ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்களின் தேர்வும் நடந்து வருகிறது.

பிரம்மாண்ட சண்டை காட்சிகள்
லேட்டஸ்ட் தகவலாக, தளபதி 65 ல் கேஜிஎப் படத்தை விட அதிக அளவில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 65 படத்திற்கு அன்பறிவு சண்டை காட்சி அமைக்க உள்ளார்.

கேஜிஎப் மறந்து போகும்
திலீப்குமாரும் இதை உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறுகையில், தளபதி 65 அதிக வலுவான படமாக இருக்கும். தளபதி 65 படத்தின் சண்டை காட்சிகளை பார்த்த பிறகு ரசிகர்கள் கேஜிஎப் சண்டை காட்சிகளை மறந்து விடுவார்கள்.

புதிய லுக்கில் விஜய்
தளபதி 65 விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள் நிறைந்த, அடுத்தடுத்த ஆக்ஷன் படமாக விஜய்க்கு அமையும் என்றார். இந்த படத்தில் விஜய் ஒரு புதிய லுக்கில் நடிக்க போவதாகவும், இதற்காக டைரக்டர் திலீப் குமார் சமீபத்தில் லுக் டெஸ்ட் ஒன்றை நடத்தி உள்ளார்.

ஹீரோயின் பூஜா ஹெக்டேவா
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.
விஜய் ரசிகர்களுக்காக துள்ளல் இசையை 3 வது முறையாக அமைக்க உள்ளார் அனிருத். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











